ரஜினி பிடிச்சாரு பாரு .. "சூப்பர் பாயிண்ட்"...! இந்தி மொழி பற்றி அடுத்து என்ன பேசுவாரோ..? 

துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் ஒரே மொழியாக இந்தியை கொண்டு வர முடியாது என நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார். 

அப்போது, "பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. அது நாட்டின் ஒற்றுமை, வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. இந்தி திணிப்பை இந்தியாவில் கூட பல மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

தமிழ்நாடு உள்ளிட்ட பல தென்னிந்திய மாநிலங்களில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாக இந்தி திணிப்பை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக நமது நாட்டில் ஒரே மொழியாக இந்தியை கொண்டு வர முடியாது" என ரஜினிகாந்த  தெரிவித்து உள்ளார். 

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு ரஜினியை நியமிக்கலாம் எண்ணற்ற பேச்சு அடிபட்டு வரும் நிலையில், ஒரே நாடு ஒரே மொழி என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு கருத்து தெரிவிக்கு பொருட்டு ரஜினி இவ்வாறு தெரிவித்து உள்ளார். 

இந்தி மொழி திணிப்பை தமிழக மக்கள் மட்டுமின்றி வட இந்தியர்கள் கூட ஏற்க மறுப்பார்கள் என தெரிவித்த ரஜினி, "துரதிர்ஷ்டவசமாக" நமது நாட்டில் ஒரே மொழியாக இந்தியை கொண்டு வர முடியாது என பன்ச் வைத்து பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.