கமலா ரஜினியா  என  நினைக்கும்  அளவிற்கு  இருவருமே இரண்டு முனைகளில் ஏதோ ஒரு விதத்தில்  அரசியல் வாசனையோடு  தான்  உள்ளனர்.

அதாவது  ரஜினிகாந்த் சில மாதங்களுக்கு முன்பு ரசிகர்களோடு ஒரு மீட்டிங் போட்டார். அவருக்கான ஆதரவை  அவரே  புரிந்துக்கொண்டார். பின்னர் அரசியலில்  ஈடுபடுவது குறித்து  சில முக்கிய   முடிவுகளை ரஜினி காந்த் எடுத்துள்ளதாக செய்திகள்  வெளியாகி பரபரப்பை  ஏற்படுத்தியது.

காந்திய மக்கள் இயக்க தலைவர்  தமிழருவி மணியன்

இதற்கு முன்னதாக திருச்சியில்  நடந்த மாநாட்டில் பேசும்போது ,ரஜினிகாந்த் அரசியல் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தன்னிடம் கூறியதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் பெயர் கொடி சின்னம் தயார்

இந்நிலையில் ரஜினி காந்த தொடங்க உள்ள புது கட்சிக்கான பெயர், கொடி மற்றும் சின்னம் தயாராக   உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அதிலும் திராவிட பெயரை கட்சியின் பெயரில் இணைக்கலாமா ? தேசிய கட்சிகள் சாயலில் பெயர்  வைக்கலாமா என  தீவிரமாக ஆலோசனை நடைப்பெற்று  வருவதாக நம்பகத்தகுந்த  தகவல்கள்  வெளியாகி உள்ளது

இதிலிருந்து கூடிய விரைவில்  தமிழக அரசியலில் ரஜினிகாந்த் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் மறுமுனையில் நடிகர் கமல் அரசியலுக்கு வருவாரா என்பது குறித்த விமர்சனங்களும்  தொடர்ந்து வந்துக்கொண்டே தான் இருக்கிறது.