கருத்து சுதந்திரம் என்பது வேண்டும் எனவும் தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வலியுறுத்துவதில் உடன்பாடு இல்லை என்றும் நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த படம்தான் மெர்சல். 

இந்த படத்தில் மத்திய அர்சு கொண்டுவந்த ஜி.எஸ்.டி குறித்தும் பணமதிப்பிழப்பு குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

இதற்கு பாஜக மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழிசை சவுந்திரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, இல கணேசன், எஸ்.வி சேகர் ஆகியோர் குறிப்பிட்ட வசனங்களை நீக்க கோரி குரல் கொடுத்தனர். 

மெர்சல் படம் யாருக்கும் எதிரானது அல்ல எனவும் அரசுக்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கும் படமும் அல்ல எனவும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் முரளி தெரிவித்துள்ளார். 

ஆனால் மெர்சல் படத்தில் உள்ள வசனங்களுக்கு மற்ற அரசியல் கட்சிகளும் திரையுலகினரும் பலத்த ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில், கருத்து சுதந்திரம் என்பது வேண்டும் எனவும் தணிக்கை செய்யப்பட்ட படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வலியுறுத்துவதில் உடன்பாடு இல்லை என்றும் நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.