அல்வா உடன் ஆரம்பித்த பட்ஜெட் அல்ல உடன் முடிந்தது என மக்கள் நீதி மையம் தென் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார் 2020 2021 ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இன்று இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார் . மக்களின் வருமானத்தை உயர்த்தி , வாங்கும் திறனை அதிகரிக்கச் செய்யும் பட்ஜெட்டாக அமையும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

 

சாதாரண மக்களின் வருமானத்தை உயர்த்தும் பட்ஜெட் இது என்றார் தொடர்ந்து பேசிய அவர், நபார்டு வங்கி மூலம் விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்ற அவர் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி நாடு நகர்ந்து கொண்டிருக்கிறது  எனவும் கூறியுள்ளார்.  கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பை உறுதி செய்ய பட்ஜெட்டில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக்க தொடர்ந்து மத்திய அரசு பணியாற்றும் என்றார்.  

விளை பொருட்களை கொண்டு செய்வதற்காக தனி விமானம் இயக்கப்படும் ,  வேளாண்  சந்தையை தாராளமயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டும்,  எனவும் கூறியுள்ளார். ரூ.5 லட்சம் முதல் 7.5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி 10 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். ரூ.10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 20 சதவிகிதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்திற்கு 15 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. ரூ.15 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானத்திற்கு 30 சதவிகித வருமான வரி தொடரும். 

கிசான் ரயில் மூலம் பால், பழங்கள், காய்கறிகளைக் கொண்டு செல்ல வசதி செய்யப்படும்.  விரைவில் அளிக்கக்கூடிய காய்கறி பழங்கள் நுகர்வோரை விரைவில் சென்றடைய கிருஷி உடான் என்ற புதிய திட்டத்தின் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல வசதி ஏற்படுத்தப்படும் என்றார் முன்னதாக 20 லட்சம் விவசாயிகளுக்கு சேலார் பம்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இந்நிலையில் மத்திய பட்ஜெட்டை குறித்து கருத்து தெரிவித்துள்ள கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில்  தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார் அதிகாரிகளுக்கு அல்வாவுடன் ஆரம்பிக்கப்பட்ட பட்ஜெட் மக்களுக்கு அல்வா உடன் முடிந்தது , நீண்ட உரை ஆனால் சரியான தீர்வு இல்லை என விமர்சித்துள்ளார்.