Actor Kamal has been in charge of politics in Aluvaarpet.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல் அரசியல் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். அப்போது ஏராளமான தொண்டர்கள் வாசலில் குவிந்த வண்ணம் உள்ளனர். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் அவ்வபோது ஆளுங்கட்சியான எடப்பாடி ஆட்சியை விமர்சித்து வந்தார். இதற்கு அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

ஆனால் நடிகர் கமல் அதற்கு பதிலுக்கு பதில் பதிலடி கொடுத்து வந்தார். இவை அனைத்தையும் தமது டுவிட்டர் மூலமே பரப்பி வந்தார். அதற்கும் மீடியாக்கள் செவி சாய்த்தன. 

இதையடுத்து அவர் களத்தில் இறங்கட்டும் அப்புறம் பேசட்டும் என அமைச்சர்கள் ஏவி விட்டனர். அதே போல் தாம் அரசியலுக்கு வருவது உறுதி என நடிகர் கமல் தெரிவித்தார். 

இந்நிலையில் இடையிடையே காணமல் போவதால் பல விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வரும் ஜனவரி 26-ந் தேதி முதல் தீவிர அரசியலில் குதிக்க போவதாக தெரிவித்துள்ளார். 

இதைதொடர்ந்து இன்று வேளச்சேரியில் நடிகர் கமல் பேசுகையில் என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன் எனவும் இந்தியாவின்பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும் எனவும் தெரிவித்தார். 

மேலும் அதற்கான பயணம் அடுத்தமாதம் தொடங்குகிறது எனவும் கல்வி, சுகாதாரம், மருத்துவம், போக்குவரத்து ஆகியவை சரியாக இல்லை எனவும் குறிப்பிட்டார்.

பின்னர் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டு வாசலில் ஏராளமான தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.