இதனால் தான் ஓபிஎஸ்சை தொண்டர்கள் வெறுத்துவிட்டனர்.. உண்மையை போட்டு உடைத்த ராஜன் செல்லப்பா..!
அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும். அதிமுகவுக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் வீறு கொண்டு செயல்படும். கட்சியில் இருந்து சில தலைவர்கள் மட்டுமே சென்றுள்ளனர். கட்சி உடையவில்லை.
அதிமுகவில் உட்கட்சி பிரச்னை வந்தால் நீதிமன்றத்துக்கு செல்ல கூடாது என விதி உள்ளது. விதியை மீறி ஓபிஎஸ் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை வண்டியூரில் அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாளையோட்டி அதிமுக சார்பில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜன் செல்லப்பா;- எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொது செயலாளராக ஏற்றுக் கொண்டது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற சொத்து வரி, மின் கட்டண உயர்வுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களே அதற்கு சாட்சி. தேர்தலில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் திமுக நிறைவேற்றவில்லை. 2011ல் திமுக அரசு விழ்ந்ததற்கு காரணம் மின்வெட்டு தான்.
இதையும் படிங்க;- “ஓபிஎஸ் நடத்திய ரகசிய பரிகாரம்.. டெல்லிக்கு செல்லும் இபிஎஸ், வாரணாசியில் ஓபிஎஸ்” - தொடரும் மர்மங்கள்
சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வை செய்த திமுக அரசு விரைவில் பேருந்து கட்டணத்தையும் உயர்த்த உள்ளது. முதியோருக்கு நியாயமாக கொடுத்த முதியோர் உதவித்தொகை திட்டத்தை எதேதோ சொல்லி நிறுத்தி விட்டார்கள். அம்மா மினி கிளினிக்கை மூடியதால் அரசுக்கு என்ன லாபம் கிடைத்தது. அம்மா உணவகத்தில் மக்களுக்கு உணவுகளை கொடுக்க சொன்னால் திமுகவினர் ஆம்பலேட் போடுகின்றனர். ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட உன்னதமான திட்டமான தாலிக்கு தங்கம் திட்டத்தை திமுக நிறுத்தி விட்டது.
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த மக்கள் நல திட்டங்களை திமுக நிறுத்தி வருகிறது. கருணாநிதி பெயரால் திறக்கப்படும் நூலகத்தால் யாருக்கு பயன். அதிமுக ஆட்சி காலத்தில் மதுரையில் டைடல் பார்க் அமைக்க அவனியாபுரத்தில் 13 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெயர் அளவில் டைடல் பார்க் அமைக்கப்படும் முதல்வர் அறிவித்துள்ளார். திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டி திறக்கப்பட்ட திட்டங்கள் ஏதும் உள்ளதா? தமிழக அரசின் தற்போதைய கடன் ஒன்றரை இலட்சம் கோடியாக உள்ளது. தமிழக அரசு கடனில் தத்தளித்து வருகிறது. மதுரையில் டைடல் பார்க் கொண்டு வந்தால் திமுக மிக திறமையான கட்சியாகும். திமுக கொண்டு வந்தது காலை உணவு திட்டம் அல்ல உப்புமா திட்டம். இதன் மூலம் மதிய உணவு திட்டத்தை மூட திட்டமிட்டுள்ளனர். அம்மா உணவகத்தை மூட இதை திட்டமிட்டு செய்துள்ளனர். திமுக அரசில் அறிவிப்போடு தான் திட்டங்கள் உள்ளன. இன்னும் அரசாணை வெளியிடவில்லை.
திமுகவுக்கு 40க்கு 40 எங்கிருந்து வரும். எல்லா பொருட்களின் விலையையும் உயர்த்திவிட்டால் எப்படி 40க்கு 40 வரும். தமிழகத்தில் போதைபொருள் பழக்கம் அதிகரித்து விட்டது. திமுக ஸ்டாலின் அரசில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு கிடக்கிறது. அதிமுக என்பது ஆலமரம். இரட்டை இலையோடு தலைமைக்கழகத்தோடு மீண்டும் இபிஎஸ் ஆட்சிக்கு வருவார். திமுகவோடு கூட்டு வைத்ததால் ஒபிஎஸ்சை தொண்டர்கள் வெறுத்துவிட்டனர். பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கிறோம்.
அதிமுகவில் விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும். அதிமுகவுக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் வீறு கொண்டு செயல்படும். கட்சியில் இருந்து சில தலைவர்கள் மட்டுமே சென்றுள்ளனர். கட்சி உடையவில்லை. திமுக கூட்டணி கட்சிகள் ஒவ்வொரு திசையில் இருப்பதால் திமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியாது என பேசினார்.
இதையும் படிங்க;- ராசாவின் பேச்சுக்கு எந்த பிராமனணும் போராடவில்லை: யாருக்காக போராடினோமோ அவன்தான் எதிர்க்கிறான்-RS பாரதி.