மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 4 வருடங்கள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.

 

இதனை தொடர்ந்து சசிகலா சிறையில் கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்கும் மேல் தண்டனை அனுபவித்து வருகின்றார். சசிகலா விடுதலை பற்றி அவரது வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் சமீபத்தில் கூறியதாவது: நீதிமன்றத்தில் இருந்து தகவல் வந்ததும் அபராத தொகையை செலுத்துமாறு சசிகலா கூறினார்.

இதனையடுத்து அபராதத் தொகை செலுத்தும் நடைமுறை முடிந்ததும், 2 நாட்களில் சசிகலா வெளியே வருவார் என வக்கீல் கூறியுள்ளார்.
இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, சிறையில் இருக்கும் சசிகலா ரூ.10.10 கோடி அபராதத்தை நீதிமன்றத்தில் செலுத்தினார். சசிகலா விரைவில் விடுதலை ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம். 

சசிகலா விடுதலையானதும் பெங்களூரில் இருந்து சென்னை வரை பிரமாண்ட வரவேற்பு அளிக்க சசிகலா தரப்பு ஆலோசனை நடத்தி வருகிறது. ஆயிரக்கணக்கான கார்களில் பெங்களூரு சென்று சசிகலாவை வரவேற்கவும் தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
எது எப்படியோ சிறையில் இருந்து வெளியே வந்ததும் அதிமுகவில் மீண்டும் சலசலப்பு ஏற்படலாம் என்று தெரிகிறது.