காவல்துறையை ஏவல்துறையாக மாற்றிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் கூறினார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொலைக்காட்சி வாயிலாக தெரிந்து கொண்டதாக கூறியது யார்? சட்ட சட்டப்பேரவையை சத்த சபையாக மாற்ற நான் விரும்பவில்லை. 

மழை வெள்ளம் குறித்து பேச அதிமுகவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. கொடநாடு கொலை கொள்ளை, பொள்ளாச்சி பலாத்காரம், குட்கா விவகாரத்தில் முத்திரை பதித்தவர்கள் அதிமுகவினர் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில்;- காவல்துறையை ஏவல்துறையாக மாற்றிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் கூறினார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொலைக்காட்சி வாயிலாக தெரிந்து கொண்டதாக கூறியது யார்? சட்ட சட்டப்பேரவையை சத்த சபையாக மாற்ற நான் விரும்பவில்லை. திமுகவை சேர்ந்தவர்களே தவறு செய்தாலும், அண்ணா மீது ஆணையாக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாவின் கூறியுள்ளார். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. திண்டுக்கல், தேனி, திருவள்ளூர் மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படும். பெண்களுக்கான எதிரான குற்றங்கள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டு வருகிறது. 

கொரோனா தடுப்பது தடுப்பூசி தான். திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 8.09 சதவீதம் பேர் தான் முதல் டோஸ் போட்டனர் . 2வது டோஸ் 2.84 சதவீதம் தான் தடுப்பூசி போட்டனர். அடுத்த 7 மாதங்களில் ஆட்சிக்கு வந்த உடன் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பூசி போடுவதை மக்கள் விழிப்புணர்வாக மாற்றினோம். 87சதவீத மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியும், 62.25 சதவீத மக்கள் 2வது டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். 8.76 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டு உள்ளன. 

ஒமிக்ரானை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உங்களை காக்கும் அரசாக மட்டுமல்லாமல் உயிர்காக்கும் அரசாகவும் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளும் விரைவில் மேம்படுத்தப்படும். கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். தொழிற்சாலைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம். 

மழை வெள்ளம் குறித்து பேச அதிமுகவுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. கொடநாடு கொலை கொள்ளை, பொள்ளாச்சி பலாத்காரம், குட்கா விவகாரத்தில் முத்திரை பதித்தவர்கள் அதிமுகவினர். இதனை மக்கள் மறக்க மாட்டார்கள். குற்றம்சாட்டுவதற்கு முன்னர் தங்களது கைகளில் குறை உள்ளதா என பார்த்து பேச வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.