இந்நிலையில் அரசுடமையாக்கப்பட்ட இடங்களை இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்த சொத்துக்கள் மூலம் பெறப்படும் வாடகை மற்றும் இதர வருவாய் அனைத்தும் தமிழக அரசுக்கு சொந்தம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசுடமையாக்கப்பட்ட இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி இன்று காலை நேரில் ஆய்வு செய்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அப்போது சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் அதே தீர்ப்பையே மீண்டும் உறுதி செய்தது.

அதன்படி சென்னை வருவாய் மாவட்டத்தில் சுதாகரன் மற்றும் இளவரசிக்கு சொந்தமான 6 சொத்துகளை அரசுடமை ஆக்குவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதிக்கு உட்பட்ட கிரீம்ஸ் சாலையில் இருக்கக்கூடிய வாலஸ் தோட்டம் பகுதியில் உள்ள 5 மனைகள், ஸ்ரீராம் நகர் டிடிகே சாலையில் உள்ள அடுக்குமாடி வீடு ஆகியவை அரசுக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அரசுடமையாக்கப்பட்ட இடங்களை இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், இந்த சொத்துக்கள் மூலம் பெறப்படும் வாடகை மற்றும் இதர வருவாய் அனைத்தும் தமிழக அரசுக்கு சொந்தம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பெங்களூரூ சிறையில் இருந்த ச சிகலா விடுதலையாகி இன்று தமிழகம் வரும் நிலையில் அவர்களது உறவினர்களின் சொத்துக்களை அரசு கைப்பற்றியுள்ளது குறிப்பிடதக்கது.
