திருநெல்வேலி மாவட்ட திமுக, நிர்வாக வசதிக்காக 4 ஆகப் பிரிக்கப்படுவதாகவும், அதற்குரிய மாவட்டப் பொறுப்பாளர்களையும் திமுக பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு, திருநெல்வேலி மத்திய ஆகிய மாவட்டங்கள், கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப்பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், திருநெல்வேலி கிழக்கு - திருநெல்வேலி மத்திய, தென்காசி வடக்கு - தென்காசி தெற்கு என நான்கு மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது. 

1. திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்

* அம்பாசமுத்திரம்
* நாங்குனேரி
* இராதாபுரம்

2. திருநெல்வேலி மத்திய மாவட்டம்

* திருநெல்வேலி
* பாளையங்கோட்டை

3. தென்காசி வடக்கு மாவட்டம்

*  வாசுதேவநல்லூர் (தனி)
*  கடையநல்லூர் 

4. தென்காசி தெற்கு மாவட்டம்

* சங்கரன்கோவில் (தனி)
* தென்காசி
* ஆலங்குளம் 

திருநெல்வேலி கிழக்கு - திருநெல்வேலி மத்திய - தென்காசி வடக்கு - தென்காசி தெற்கு ஆகிய மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்.

கழக நிர்வாக வசதிக்காகவும், கழகப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும் புதியதாக அமையப் பெற்ற திருநெல்வேலி கிழக்கு - திருநெல்வேலி மத்திய, தென்காசி வடக்கு - தென்காசி தெற்கு ஆகிய மாவட்டங்களுக்கு பின்வருமாறு மாவட்டப் பொறுப்பாளர் நியமிக்கப்படுகிறார்கள்.

1. திருநெல்வேலி கிழக்கு மாவட்டம்

பொறுப்பாளர் - இரா. ஆவுடையப்பன்

2. திருநெல்வேலி மத்திய மாவட்டம்

பொறுப்பாளர் - மு.அப்துல் வஹாப்

3. தென்காசி தெற்கு மாவட்டம்

பொறுப்பாளர்  - பொ. சிவபத்மநாதன் 

4. தென்காசி வடக்கு மாவட்டம்

பொறுப்பாளர்  - ஆ. துரை ஆகியோர் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.