Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ் மீது கடும் டென்சனில் ஏ.சி. சண்முகம்... வேலூர் தேர்தல் டென்சன்..!

வேலூரில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் ஓபிஎஸ் மகன் பேசிய பேச்சு ஏசி சண்முகத்தை டென்சனில் ஆழ்த்தியுள்ளது.

AC shanmugam tension
Author
Tamil Nadu, First Published Jul 28, 2019, 10:28 AM IST

வேலூரில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் ஓபிஎஸ் மகன் பேசிய பேச்சு ஏசி சண்முகத்தை டென்சனில் ஆழ்த்தியுள்ளது.

வேலூர் தொகுதியில் முஸ்லீம் வாக்காளர்கள் அதிகம். ஆம்பூர், வாணியம்பாடி போன்ற பகுதிகளில் வெற்றியை தீர்மானிக்க கூடியவர்கள் முஸ்லீம்கள் தான். இதனால் இந்த இரண்டு தொகுதிகளிலும் கடந்த சில நாட்களாகவே ஏசிஎஸ் ஸ்பெசல் கவனிப்புகளை செய்து வந்தார். ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி என்பதால் முஸ்லீம்கள் பகுதியில் சண்முகத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. AC shanmugam tension

ஆனால் அந்த பகுதியில் தனது சொந்த செலவில் சில பல திட்டங்களை அறிவித்து அவர்களை கவர பகீரத முயற்சி மேற்கொண்டு வந்தார் ஏசிஎஸ். ஏனென்றால் கடந்த 2014 தேர்தலில் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட ஏசிஎஸ் தோல்வி அடைந்திருந்தார். அப்போதும் கூட வேலூரில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி தொகுதிகள் தான் ஏசிஎஸ்சை கவிழ்த்திருந்தது. இதனால் தான் இந்த முறை அந்த பகுதிகளுக்கு ஸ்பெசல் கவனிப்புகள் நடந்து வந்தன.

 AC shanmugam tension

இந்த நிலையில் நாடாளும்ன்றத்தில் முத்தலாக் தடை மசோதா மீது ஓபிஎஸ் மகனும் அதிமுக நாடாளுமன்ற குழு தலைவருமான ரவீந்திரநாத் பேசினார்.  அப்போது முத்தலாக் தடை மசோதா முஸ்லீம் பெண்களை பாதுகாப்பதற்கானது என்று கூறியதுடன் அதனை அதிமுக முழுமையாக ஆதரிப்பதாக கூறினார். இதனை கேட்டு யாருக்கு அதிர்ச்சியாக இருந்ததோ தெரியாது ஆனால் ஏசிஎஸ் இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்திருப்பார்.

 AC shanmugam tension

ஏனென்றால் முத்தலாக் தடை மசோதாவிற்கு எதிராக முஸ்லீம்கள் ஒரே நிலைப்பாடு கொண்டுள்ளனர். முஸ்லீம் பெண்கள் இந்த மசோதாவை ஆதரிப்பதாக கூறினாலும் அவர்கள் முழு அளவில் ஏசிஎஸ்க்கு வாக்களிப்பது சந்தேகம். இதனால் வாணியம்பாடி, ஆம்பூரில் செய்து வைத்த ஏற்பாடுகள் எல்லாம் வீணாகிவிட்டதே என்று ஏசிஎஸ் டென்சன் ஆகியுள்ளார். ஆதரித்து பேசாமல் வெறும் வாக்கை மட்டும் கூட செலுத்தியிருக்கலாமே என்றும் ஏசிஎஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். AC shanmugam tension

எது எப்படியே முத்தலாக் தடை மசோதா விவகாரத்தில் அதிமுக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்ட விதம் வேலூரில் ஏசிஎஸ்க்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தான் சொல்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios