நடைபெற உள்ள வேலூர் தொகுதி மக்களவை அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து தேர்தல் பிரச்சாரத்திற்கு வர அழைப்பு விடுத்துள்ளார். 

வேலூருக்கு மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலூர் தொகுதி இப்போதே கலைகட்ட ஆரம்பித்துள்ளது. மீண்டும் அங்கு அதிமுக கூட்டணி வேட்பாளராக ஏ.சி.சண்முகம் களமிறங்க உள்ளார். இப்போதே அவர் தேர்தல் பணிகளில் ஆர்வம் காட்டி வருகிறார். வேலூர் தொகுதியில் விஜயகாந்த் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இதனால் கடந்த முறையே விஜயகாந்தை ஏ.சி.சண்முகம் நேரில் சந்தித்து பிரச்சாரத்திற்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்திருந்தார். 

ஆனால் வடசென்னை தொகுதியில் மட்டும் ஒரே ஒருநாள் பிரச்சாரம் செய்து விட்டு சிறிது நேரத்திலேயே வீடு திரும்பினார் விஜயகாந்த். இதனால் அவர் வேலூர் செல்லவில்லை. ஆனால் பிரேமலதா விஜயகாந்த் அங்கு பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் விஜயகாந்தை அவரது கட்சி அலுவலகத்தில் ஏ.சி.சண்முகம் சந்தித்து பேசினார். 

அப்போது கேப்டன், இந்த முறை நீங்க வேலூருக்கு வந்து பிரச்சாரத்தில் கலந்து கொண்டே ஆக வேண்டும். நீங்கள் பேசாவிட்டாலும் பரவாயில்லை. முகத்தை காட்டினால் போதும். நான் வேலூரில் வெற்றிபெற்று விடுவேன்’ எனக் கேட்டுள்ளார். விஜயகாந்தும் பிரச்சாரத்திற்கு வருவதாக நம்பிக்கை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.