70 தொகுதிகளை  கொண்டது டெல்லி சட்டசபை. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. டெல்லியை எப்படியாவது கைப்பற்றியே தீரவேண்டும் என்பதற்காக பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டது பலனளிக்கவில்லை என்று சொல்லும் அளவிற்;கு தற்போதைய தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

By. T.Balamurukan

70 தொகுதிகளை கொண்டது டெல்லி சட்டசபை. இந்த தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. டெல்லியை எப்படியாவது கைப்பற்றியே தீரவேண்டும் என்பதற்காக பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டது பலனளிக்கவில்லை என்று சொல்லும் அளவிற்;கு தற்போதைய தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.


ஆம் ஆத்மி 54 தொகுதிகளிலும் பாஜக16 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. காங்கிரஸ் ஒரு தொகுதிகயில் கூட வெற்றி பெறவில்லை. ஆம் ஆத் மி கட்சியில் இருந்து விலகி பாஜக காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர்கள் எல்லாம் பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறார்கள். மக்கள் யாரும் மற்ற கட்சிகளை ஆதரிக்கவில்லை. அரவிந்த்கெஜரிவால் டெல்லி மக்களுக்கு நிறைய திட்டங்களை கொடுத்திருக்கிறார்.இதுவே அவருக்கான வெற்றியாக பார்க்கப்படுகிறது.


தொடர்ந்து 3வது முறையாக ஆம் ஆத் மி டெல்லியை கைப்பற்ற இருக்கிறது. இதுவரைக்கும் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாதது அரசியல் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. சென்ற தேர்தலில் 3 இடங்களை கைப்பற்றிய பாஜக இந்த முறை 16 இடங்களில் முன்னிலை என்பது மகிழ்ச்சி என்கிறார்கள்.