welcome to ops

தர்மம் வெல்ல சூளுரைத்தவரே வருக!!! வருக!!! ஓபிஎஸ்க்கு சொந்த ஊரில் பல்லாயிரக்கணக்கானோர் உற்சாக வரவேற்பு…

முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்க்கு அவரது சொந்த ஊரான போடியில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. சசிகலாவுடன் ஏற்பட்ட மோதலுக்கடுத்து, தனி அணி தொடங்கிய ஓபிஎஸ் மீண்டும் அவரது சொந்த தொகுதிக்கு வந்ததால், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு வந்து ஓபிஎஸ்க்கு வரவேற்பு அளித்தனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓபிஎஸ் தனது அதிரடி நடவடிக்கைகளால் பொது மக்கள் மத்தியில் நல்ல பெயரைப் பெற்றிருந்தார்.

ஜல்லிக்கட்டு, வர்தா புயல், கிருஷ்ணா நதிநீர் உள்ளிட்ட பிரச்சனைகளில் விரைந்து செயல்பட்டு தன்னை ஒரு ஆக்டிவ் முதலமைச்சர் என அறியச் செய்தார்.

ஆனால் சசிகலா திடீரென ஓபிஎஸ்சிடம் வலுக்கட்டாயமாக ராஜினாமா கடிதத்தைப் பெற்று தான் முதலமைச்சராக முயற்சிசெய்தார். இதயைடுத்து சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி உயர்த்தினார். தொடர்ந்து தனி அணியை உருவாக்கினார்

ஓபிஎஸ் அணிக்கு பொது மக்களும், அதிமுக தொண்டர்களும் பெருமளவு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் நேற்று அவரது சொந்த ஊரான போடிக்கு வருகை தந்தார். அவரது வருகையையொட்டி போடி நகரமே விழாக் கோலம் பூண்டிருந்தது.

ஓபிஎஸ்ஐ ஆதரித்து ஏராளமான பிளக்ஸ் வைக்கப்பட்டிருந்தன. அதில் தர்மம் வெல்ல சூளுரைத்தரே வருக..வருக.. என பதிவிட்டிருந்தனர்.

ஏராளமான தொண்டர்கள் அவருக்கு மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்

இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.