Asianet News TamilAsianet News Tamil

துரைமுருகன் விட்டது வெறும் ட்ரைலர் தான்... அல்லு தெறிக்கவிட்டதே ஆ.ராசா தான்!!... கதிகலங்கி நிற்கும் வைகோ, திருமா!

துரைமுருகன் கிள்ளிய திரியை ராசாவை விட்டு  கொளுத்திவிட்டார் ஸ்டாலின். ஆ.ராசராவின் இந்த அந்தர் பேட்டியை கொஞ்சமும் எதிர்பார்க்காத திருமாவும், வைகோவும் கதிகலங்கி கிடக்கிறார்களாம்.

A.Rasa exclusive interview against thirumaa and vaiko
Author
Chennai, First Published Dec 6, 2018, 2:34 PM IST

துரைமுருகன் ஒரு டீசர் ரிலீஸ் செய்தார் ஸ்டாலின். இது தான் சமயம் என அறிவாலயத்திற்கு அலறியடித்து ஓடிவந்தனர் வைகோவும் திருமாவும், அப்போது கூட்டணி வைப்போம் ஸ்டாலின் தான் முதல்வர் என வழக்கமாக அறிவாலய வாசலில் நின்றுகொண்டு ஆவேச வசனம் பேசிவிட்டு சென்றார்கள். ஆனால் திமுக தலைவரோ இதையெல்லாம் நம்புவதாக இல்லை, இந்த இரண்டுபேரும் எப்போதுவேனாலும் காலை வாரிவிடுவார்கள். கடைசி நேரத்தில் டிமிக்கி கொடுத்துவிட்டு மக்கள் னால கூட்டணி போல ஒரு டீம் ஃபாம் பண்ணாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என அடுத்து ஒரு ட்ரைலரை வெளியிட பிளான் போட்டார் தலைவர். அது என்னன்னா? திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளராக இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வை தனியார் தொலைக்காட்சியில் பேட்டி கொடுக்க வைத்தார்.

A.Rasa exclusive interview against thirumaa and vaiko

துரைமுருகன் அளித்த பேட்டி என்பது திமுக தலைவரான ஸ்டாலினுக்குத் தெரியாமல்  தான் நடந்தது. ஆனால் நான் சொல்லவரா மேட்டரு ரொம்ப சீரியஸ் என சொல்லும் ரேஞ்சில் இருந்தது. ஆமாம்,  ராசாவும் ஊடகங்கள்தான் திமுக கூட்டணியைப் பிரித்து மேய்கின்றன என்று பேசினார். அதேநேரம் அவர் துரைமுருகன் பேட்டியில் சொன்ன சில விஷயங்களைப் பிரித்து மேய்ந்துவிட்டார்.

“இப்போது எங்களோடு இருக்கும் கட்சிகள் கடைசி நேரத்தில் முறுக்கிகினு போகலாம். கடைசி வரைக்கும் எங்களை எதிர்க்கிற கட்சிகள் திடீர்னு எங்க கூட வரலாம்” என்று சொல்லியிருந்தார் துரைமுருகன். விடுதலைச் சிறுத்தைகள் கடைசி நேரத்தில் வெளியே போகலாம், பாமக கடைசி நேரத்தில் உள்ளே வரலாம் என்ற செய்தியை பூசியும் பூசாமலும் சொன்னதுதான் துரைமுருகன் பேட்டி.

ஆனால், ‘’ ஊடகங்களே எல்லா பணிகளையும் செய்கின்றன” என்று சொல்லிவிட்டு துரைமுருகனின் பேட்டிக்கு பதில் பேட்டி போலவே ஆ.ராசா  தெறிக்கவிட்டிருந்தார்.

A.Rasa exclusive interview against thirumaa and vaiko

அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று அறிவித்துவிட்டு தோழமைக் கட்சிகளை மட்டுமே அழைத்திருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, குறிப்பாக பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைக்கவில்லையா என்ற கேள்விக்கு ஆ.ராசாவின் பதில் பல செய்திகளைச் சொல்கிறது.

“கடந்த கால அனுபவம் இருக்கிறது. அவங்களை எல்லாம் கூப்பிட்டு எங்கள் சுயமரியாதையை சுட்டுக் கொள்ள நாங்க விரும்பலை” என்கிறார் ராசா. மேலும், “பிஜேபி, அதிமுகவை வீழ்த்த திமுக ஒன்றே போதும். கூட்டணிக்கு வரும் கட்சிகள் வெற்றி வாய்ப்பு இருக்குமானால் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என வலியுறுத்துவோம். ஆனால், இதை ஏற்பதும், ஏற்காததும் அவர்களது விருப்பம்.  கமல்ஹாசன் தினகரன் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். அண்ணா, கலைஞர் ஆகியோர் வழியில் கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார். கூட்டணி அமைத்தாலும், அமைக்காவிட்டாலும் திமுகவே வெற்றி பெறும்” என்றெல்லாம் பேசியிருக்கிறார் ஆ.ராசா. 

A.Rasa exclusive interview against thirumaa and vaiko

அதாவது, "உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும்" கூட்டணி அமைத்தாலும், அமைக்காவிட்டாலும் திமுகவே வெற்றி பெறும், துரைமுருகன் பேட்டியை மிஞ்சும் அளவிற்கு ஆ.ராசா அந்தர் பண்ணியிருந்தார்.  துரைமுருகன் கிள்ளிய திரியை ராசாவை விட்டு  கொளுத்திவிட்டார் ஸ்டாலின். ஆ.ராசராவின் இந்த அந்தர் பேட்டியை கொஞ்சமும் எதிர்பார்க்காத திருமாவும், வைகோவும் கதிகலங்கி கிடக்கிறார்களாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios