சாட்சி எல்லாம் செத்ததுக்கு பின்னாடி வெளியில் வருவதற்கு பேர் விடுத்லை இல்லை. தப்பி பிழைக்கறது. ஆனால் ரொம்ப நாள் தப்பிக்க முடியாது’’ என ஆ.ராசாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அதிமுக கொள்கைபரப்பு துணைச் செயலாளரான விந்தியா.  

ரொம்பநாள் தப்பிக்க முடியாது என்கிற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள கட்டுரை நமது அம்மா நாளிதழில் வெளியாகி இருக்கிறது. அதில், ‘’சட்டத்துக்கு தேவை சாட்சிதான், தர்மம் இல்லைங்கற தைரியத்துல செஞ்ச ஊழல் 2G. தப்பே பண்ணலைன்னா ராஜாவும், கனிமொழியும் திகார் ஜெயில்ல என்ன திருவிழா கொண்டாடவா போனாங்க! சாட்சி எல்லாம் காலி பண்ணிட்டு வெளில வந்தா அதுக்கு பேரு விடுதலை இல்லை. தப்பிக்கறது. ஆனா ரொம்பநாள் தப்பிக்க முடியாது... நாங்க மக்களை காப்பாத்த பப்ஜி தடை பண்ண மனு கொடுத்தா மாதிரி 2ஜியை பத்தி பேசுறத தடை பண்ணுங்கனு ம்னு கொடுப்பார்போல ராசா.  சாதிக் பாட்ஷாவை சாவடிக்காம நீங்க கேஸ் நடத்தி ஜெயிச்சு இருந்தா அது மாஸ்.

 ஆனால் என்னாச்சு சாதிக் பாட்ஷா சாவுக்கு அடிச்ச கண்ணீர் அஞ்சலி போஸ்டரிலேயே கூட நட்பு கேடாய் முடியும் என்ற வாசகம் எழுதுற அளவுக்கு கேவலமா நடந்துக்கிட்டு அந்த கேஸ்ல வெளில வந்தீங்க. இதுக்கு பேர் விடுதலையா? ‘’என்றெல்லாம் வெளுத்து வாங்கிய விந்தியா, ‘’சூடு சொரணை இருக்குறவன் பொய் கேஸ் போட்ட காங்கிரஸ் ஆட்சியை கவுத்து இருக்கணும். இல்லை இன்னும் ஏன் சோனியா, சோனியானு போனியாகத கட்சிகூட அடிமை வாழ்க்கை நடத்திட்டு இருக்கணும்? ஏன்னா போட்ட கேஸும் உண்மை. செஞ்ச ஊழலும் உண்மை. 

 

2ஜி இன்னும் முடியவில்லை. காத்துக்கொண்டிருக்கிறது பூதம் மாதிரி. ஆ.ராசாவுக்கும், கனிமொழிக்கும் பரவாயில்லை. திகார் ஜெயில் கெஸ்ட் ஹவுஸ் மாதிரி பழகி போய்விடும். ஸ்டாலினை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது. இங்கிலீஸ், இந்தி தெரியலைனாக்கூட சமாளிச்சிடலாம். அவருக்கு தமிழே வராது. கடைசியா ஒண்ணு சொல்லுறேன். சாட்சி எல்லாம் செத்ததுக்கு பின்னாடி வெளியில் வருவதற்கு பேர் விடுத்லை இல்லை. தப்பி பிழைக்கறது. ஆனால் ரொம்ப நாள் தப்பிக்க முடியாது’’ எனத் தெரிவித்துள்ளார்.