சிறுநீரக நோய் தொற்று ஏற்பட்டு, கடும் காய்ச்சலால், நேற்று முன்தினம் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட  கருணாநிதிக்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருணாநிதியின் உடல்நிலை குறித்து  விசாரித்து வரும் நிலையில்,  துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு   கருணாநிதியை சிகிச்சைபெறும் அறைக்கே வந்து பார்த்த போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

 இந்த புகைப்படத்தில் நன்றாக பார்த்தால் கருணாநிதியின் உடல் நிலை குறித்த தற்போதைய நிலைமையை அறிந்துகொன்ள்ள முடிகிறது. சுவாச குழாய் இணைப்பு இன்றி இயல்பாக இருக்கிறார் கருணாநிதி. செய்ற்க்கை சுவாசம்  இல்லாமலலேயே, நார்மலாக சுவாசிப்பது தெரிகிறது. ரத்த அழுத்தம் 94-97 உள்ளதாக புகைபடம் காட்டுகிறது.

அதேபோல் அவருக்கு முறையாக மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உடல்நிலை குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புகைப்படம் வெளியாகி உள்ளது.