துக்ளக் இதழில் ஆடிட்டர் குருமூர்த்தி மு.க.ஸ்டாலின் மிசா கைதி தான் என ஒத்துக்கொண்டிருந்தார். ஆனாலும், பலரும் மிசா விவகாரத்தை விடுவதாக இல்லை. 

திமுக எதிர்ப்பாளரான மாரிதாஸ், ‘’திமுக தலைவர் ஸ்டாலின் மிசா கைது ஆதாரம் கேட்டால் ; அவர் அப்பா எழுதிய கடிதம் பாருங்கள் என்கிறார்கள். இங்கே யாராவது அவர் கைதாகவில்லை என்று சொன்னோமா? பஞ்சாயத்தே அவர் எதற்குக் கைதானார் என்பது தான். கொடுமை என்னவென்றால் இன்று ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார்கள் கலைஞர் டீவி நிர்வாகிகள். அந்த கடிதம் வச்சு இன்னும் அவமானப்படப் போவது ஸ்டாலின் அவர்கள் தான்.

திமுக உடன்பிறப்புகள் போதும் அந்த குடும்பத்தின் மானத்தை வாங்க; அந்த குடும்பம் போதும் திமுக வரலாற்றை அவமானம் செய்ய... அந்த கடிதத்தில் உள்ள கையொப்பமும் உண்மையான முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் கையப்பமும் வேறு வேறு. அடுத்து அவர் சிறையில் உள்ள மகனுக்கு எழுதியதா? இல்லை சிறையில் இவர் இருக்கும் போது எழுதியதா? மத்தியச் சிறையிலிருந்து எழுதப்பட்டது என்று இருக்கிறது.

எமர்ஜென்சி 1977 ஜனவரியோடு முடிந்தது. ஆனால் கடிததில் உள்ள தேதியும் தவறு.. இது போல் ஆயிரம் போலிகளை உருவாக்க முடியும். எனவே சும்மா எதையாவது மக்களை நம்பவைக்கப் புதிது புதிதாக உருட்டாமல் ஒழுங்கா அரசு ஆவணங்கள் எதாவது இருந்தால் ஆதாரமாக வெளியிடவும். இப்போ அந்த கடிதத்தை ஒழுங்க இப்போவே நீக்கிவிட்டால் நல்லது. இல்லை வீடியோ போட்டு தெளிவாக மக்களுக்கு விளக்கம் கொடுக்கப்படும்.  ஆனால் ஒரு உண்மை தமிழகத்தில் அரசியல் கட்சியாக திமுக கட்சியினர் தான் அதிகம் மிசா கைதிகளாகக் கைது செய்யப்பட்டனர். சுமார் 419பேர். தமிழகம் முழுவதும். இது உண்மை ஆனால்... ஏன், எப்படி , எப்போது என்பது தான் கேள்வி'' எனக்கூறியுள்ளார்