அமைச்சர் ஏமாற்றியதால் இளம்பெண் தற்கொலை..! அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு..! 

பெங்களூருவில் முன்னாள் அமைச்சர் பாபுராவ் சின்சாசூர் மீது 11 கோடி ஏமாற்றியதாக பணமோசடி புகார் கொடுத்த அஞ்சனா சாந்தாவீர் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் சந்திரா லே அவுட் பகுதியில் வசித்து வருபவர் அஞ்சனா சாந்தா வீர். இவருக்கும் முன்னாள் அமைச்சர் பாபுராவ் சின்சாசூருக்கும் இடையே நட்பு ரீதியான பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் ரூபாய் 11 கோடி ஏமாற்றியதாக பாபு ராவ் மீது அஞ்சனா புகார் தெரிவித்து இருந்தார். தற்போது பாபுராவ் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு தருணத்தில் அஞ்சனா மீது பல்வேறு புகார்கள் அடுக்கடுக்காக குவிந்துள்ளது. அதன்படி கடன் வாங்கி மோசடி செய்ததாக பல்வேறு வங்கி தரப்பில் இருந்து காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பண மோசடி குறித்து அஞ்சனா மீது புகார் எழுந்த நிலையில் பண நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார் அஞ்சனா. இதுகுறித்து கல்லூரியில் படிக்கும் தன்னுடைய மகனுக்கு எழுதிய கடிதத்தில் நிதி நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்து உள்ளார்.

மேலும் தற்கொலை செய்வதற்கு முன், தன்னுடைய மகனுக்கு போன் செய்து தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார், பின்னர் அவர் தன்னுடைய நண்பர்களுடன் விரைந்து வந்து தன் தாயை பார்த்தபோது அஞ்சனா வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். அஞ்சனாவின் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட கடிதத்தில் சில முக்கிய விவரங்களை எழுதி இருப்பதாகவும் அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. அஞ்சனாவின் மரணம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.