ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.! நாம் தமிழர் வேட்பாளர் மேனகா மீது 3 பிரிவில் வழக்கு.! அதிர்ச்சியில் சீமான்
ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதியின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா மீது 3 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிர் இழந்தார். இதனையடுத்து அந்த தொகுயில் வருகிற 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருமகன் ஈவேராவின் தந்தையுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடவுள்ளார். அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணி சார்பாக முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிடுகிறார்.
ஈரோட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம்
நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகாவும், தேமுதிக சார்பாக ஆனந்தும் போட்டியிட்டுள்ளனர்.ஈரோடு கிழக்கு தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளது. இதனையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி சார்பாக வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலகம் திறக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.
மேனாக மீது 3 பிரிவில் வழக்கு
இந்தநிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா ஈரோடு கிழக்கு தொகுதியில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நடத்தை விதிமுறைகளை மீறுதல், அனுமதி பெறாமல் பேரணி செல்லுதல், கட்சியின் சின்னத்தை கையில் ஏந்தி பேரணி என மூன்று பிரிவுகள் கீழ் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்