Asianet News TamilAsianet News Tamil

பள்ளிச்சீருடையோடு சைக்கிளில் சட்டப்பேரவைக்கு வந்த திமுக எம்எல்ஏக்கள்..! அதிர்ச்சியில் அரசு அதிகாரிகள்

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளி சீ்ருடை வழங்காததை கண்டித்து இன்று தொடங்கிய புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு பள்ளி சீருடை அணிந்தும் புத்தக பை மாட்டிக்கொண்டு வந்த திமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

DMK MLAs came to the Puducherry assembly wearing school uniforms causing a stir
Author
First Published Feb 3, 2023, 11:35 AM IST

பள்ளிச்சீருடையில் திமுக எம்எல்ஏக்கள்

புதுச்சேரி  சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியதும் சபாநாயகர் செல்வம், மறைந்த இங்கிலாந்து ராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். முன்னதாக சட்டப்பேரவைக்கு வந்த திமுக எம்.எல்.ஏக்களான எதிர்கட்சி தலைவர் சிவா தலைமையில், நாஜீம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாக தியாகராஜன் ஆகியோர் பள்ளி சீருடை அணிந்தும், புத்தக பை மாட்டிக்கொண்டு சைக்கிளில் வந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளிகள் தொடங்கி ஒருவருட காலம் முடிவடைய உள்ள நிலையில் இதுவரை மாணவர்களுக்கு அரசு பள்ளி சீருடை வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பள்ளி சீருடை அணிந்து சைக்கிளில் வந்தனர்.

DMK MLAs came to the Puducherry assembly wearing school uniforms causing a stir

முடங்கும் நிலையில் இரட்டை இலை.! சமரச பேச்சு நடத்தும் பாஜக.! இபிஎஸ்யை தொடர்ந்து ஓபிஎஸ்யையும் சந்தித்த அண்ணாமலை

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு

பின்னர் பேரவையில் மாநில அந்தஸ்து தொடர்பாகவும், பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்குவது தொடர்பாக எந்த அறிவிப்பும் அறிவிக்காததால் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக எதிர்கட்சி தலைவர் சிவா,  

ஒன்றரை வருடங்கள் ஆகியும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுவரை சீருடை, நோட்டு புத்தகங்ங்கள் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.  பஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் இதை நினைவு கூறும் வகையில் அங்கு உற்பத்தி செய்யப்படும் சீருடைகளை அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறினார்.

இதையும் படியுங்கள்

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பாஜக ஆதரவா.? இபிஎஸ்யை சந்தித்த அண்ணாமலை.! அதிர்ச்சியில் ஓபிஎஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios