9 TTV supporters were arrested while trying to keep banners.

காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி ஜெ.முதலாம் ஆண்டு நினைவுநாள் பேனர்களை வைக்க முயன்றபோது டிடிவி ஆதரவாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இரட்டை இலை சின்னம் கிடைத்த பின்னர், அதிமுக.,வில் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் மவுசு கூடி விட்டது. 

இதையடுத்து டிடிவி தினகரன் அணியில் இருந்து 3 மாநிலங்களவை எம்.பி.க்களும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வந்து ஆதரவு தெரிவித்தனர். அப்போது விஜிலா சத்யானந்த் எம்.பி., இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கே நாங்கள் இருப்போம் என்று தெரிவித்தனர். 

அவர்களை தொடர்ந்து டிடிவி அணியில் இருந்து மேலும் இரண்டு எம்.பிக்கள் எடப்பாடியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

ஒபிஎஸ் இபிஎஸ் இணைந்த கையோடு இரட்டை இலையும் கிடைத்து விட்டது. அதிமுகவின் பிரதான சின்னமான இரட்டை இலை கிட்டியதும் டிடிவி பக்கம் இருந்த அதிமுகவினர் பதவிக்காகவோ அல்லது மன நிலைப்பாட்டுக்காகவோ எடப்பாடி பக்கம் சாய்ந்து வருகின்றனர். 

ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என டிடிவி தரப்பு கூறிவருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் அனுமதியின்றி ஜெ.முதலாம் ஆண்டு நினைவுநாள் பேனர்களை வைக்க முயன்றபோது டிடிவி ஆதரவாளர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். 

கைதான 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியுள்ளனர்.