தமிழகத்தில் கல்வித்துறையில் பல மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. செங்கோட்டையன் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மாணவர்களுக்கு பல சலுகைககள வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜெ.ஜெ.நகர் அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை, பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் வசதி, தானியங்கி வருகை பதிவேடு துவக்க விழா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட வேதியியல் ஆய்வகம் திறப்புவிழா நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய  அமைச்சர் செங்கோட்டையன் , மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு மிதிவண்டியில் செல்லும் மாணவர்கள் விமானத்தில் பறக்கும் அளவிற்கு அரசு மாணவர்களின் கல்வி திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது என தெரிவித்தார்..

ஆந்திரா,கேரளா போன்ற மாநிலத்தில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பிற்கு செல்லும் மற்ற மாநில மாணவ மாணவிகளை விட தமிழக மாணவ மாணவிகள்தான் அதிக ஈர்ப்பு தன்மையுடன் கல்வியை கற்பதாக அங்குள்ள பயிற்சியாளர்கள் பெருமிதத்துடன் சொல்கிறார்கள் எனவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

.
வரும் கல்வியாண்டில் தனியார் பள்ளியை மிஞ்சும் வகையில் 1 முதல் 5-ம்வகுப்பு வரையும், 9 முதல் 12-ம் வகுப்பு வரையும் வண்ண வண்ன நிறத்தில் சீருடைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

9 முதல் 12-ம்வகுப்பு வரை அனைத்து அரசு பள்ளி வகுப்பறைகள் கணினி மயமாக்கப்பட்டு இண்டெர் நெட் வசதி செய்து தரப்படும். 8,9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவு பசியை போக்க மினி மடிக்கணினி வழங்கப்படும் என தெரிவித்த செங்கோட்டையன், தமிழகம் முழுவதும் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என தெரிவித்தார்..

வரும் காலங்களில் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலையை போக்கும் வகையில் 12-ம் வகுப்பில் ‘ஸ்கில் டிரெய்னிங்’ எனும் சிறப்பு வகுப்புகள் துவங்கப்பட்டு பிளஸ்-2 முடித்தவுடன் வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலைமையை கல்வி துறை செய்துவருகிறது எனவும் செங்கோட்யைன் அதிரடியாக தெரிவித்தார்.