Asianet News TamilAsianet News Tamil

80 தொகுதிகள்... துணை முதல்வர் பதவி... காங்கிரஸ் வைக்கும் டிமாண்டால் கதிகலங்கும் திமுக..!

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடம் ஒதுக்குவதுடன், துணை முதலமைச்சர் பதவி கண்டிப்பாக வேண்டும் என காங்கிரஸ் கேட்டு வருகிறது. 

80 constituencies ... Deputy Chief Minister post ... Congress demands DMK
Author
Tamil Nadu, First Published Sep 25, 2020, 6:22 PM IST

தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளராக சமீபத்தில் தினேஷ் குண்டுராவ் நியமிக்கப்பட்டார். தினேஷ் குண்டுராவ், காங்கிரஸ் தயவின்றி தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி கூட்டணிக் கட்சியான திமுகவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது. காங்கிரஸ் தங்களது அரசியல் சக்தியை தமிழகத்தில் பலப்படுத்த முயன்றுவருகிறது. 80 constituencies ... Deputy Chief Minister post ... Congress demands DMK

திமுக தரப்பில் மிக மிக அதிகபட்சமாக 20 முதல் 25 தொகுதிகள் வரைதான் காங்கிரஸுக்கு தர முடியும் என கூறப்படும் நிலையில், காங்கிரஸ் 80 தொகுதிகள் வரை கேட்கிறது. இதனால் திமுக திக்கு தெரியாமல் முழிக்கிறது. ராகுல் காந்தியின் அலை தமிழகத்தில் தற்போது அடித்துவருகிறது, மேலும் இளைஞர்கள் மத்தியில் ராகுல் காந்தி  நல்ல வரவேற்பபை பெற்றுள்ளார். மேலும் தினேஷ் குண்டுராவ் தற்போது  தமிழகத்தின் மேலிடப் பொருப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ளதால்,மீண்டும் காங்கிரஸ் தமிழகத்தில் பலமான கட்சியாக மாறிவருவருகிறது. இதனால் ஸ்டாலின் கலக்கத்தில் உள்ளார்.80 constituencies ... Deputy Chief Minister post ... Congress demands DMK

தென்மாவட்டங்களில் எப்போதுமே காங்கிரஸுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், ஸ்டாலின் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி வருகிறார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிக இடம் ஒதுக்குவதுடன், துணை முதலமைச்சர் பதவி கண்டிப்பாக வேண்டும் என காங்கிரஸ் கேட்டு வருகிறது. 

காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளராக தினேஷ் குண்டுராவ் அண்மையில் நியமிக்கப்பட்டார். அவரை அண்மையில் பெங்களூருவில் சென்று தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து அரசியல் நிலவரங்கள் குறித்து ஆலோசித்திருந்தனர். இதனையடுத்து தினேஷ் குண்டுராவ் நேற்று சென்னை வருகை தந்தார். திமுக- காங். கூட்டணி ஆட்சி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு அமையும் என அழுத்தம் திருத்தமாக கூறினார். அப்படியானால் திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்கிறதா? காங்கிரஸ் என பரபரப்பு ஏற்பட்டது.80 constituencies ... Deputy Chief Minister post ... Congress demands DMK

இதனால் திமுக தரப்பு பயங்கர டென்ஷனாகி விட்டதாக கூறுகிறார்கள். ஏற்கனவே கூட்டணியில் இருக்கிறோமா? இல்லையா? என ஊசலாட்டத்தில் இருக்கும் காங்கிரஸ் சீனியர்களுக்கு தினேஷ் குண்டுராவின் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  பின்னர் இங்குள்ள நிலையை தினேஷ் குண்டுராவிடம் சீனியர்கள் விளக்கவே மீண்டும் அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அதில், கூட்டணி அரசு பற்றி சொல்லாமல், மு.க. ஸ்டாலினை முதல்வராக்குவோம்; மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைய பாடுபடுவோம் திருப்பிப்போட்டார்.  தமிழகம் வந்த முதல் நாளே தினேஷ் குண்டுராவ் இப்படி கூட்டணிக்குள் கலகத்தை உருவாக்கிவிட்டுப் போனதில் காங்கிரஸ் நிர்வாகிகள் கடுப்பாகி கிடக்கிறார்கள். 


 

Follow Us:
Download App:
  • android
  • ios