கொரோனா பாதித்தவர்கள் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவர்களே காரணம் எனக்கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 834 ஆக உள்ள நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அந்த தகவலில் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் தவுஹித் ஜமாத் அமைப்பின் சார்பில் தாய்லாந்து, இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்ற மாநாட்டில் தமிழகத்தில் உள்ள திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1,500 பேர் பங்கேற்றனர். 

அவர்களில் 834 பேரில் 763 பேர் டெல்லி மாநாடு தொடர்புடையவர்கள். நேற்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 96 பேரில் 84 பேர் இந்த மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ந்து போன மற்ற மாநிலங்கள் தமிழகத்தின் பரிதாப நிலையை திரும்பிப்பார்த்து வருகின்றனர்.