Asianet News TamilAsianet News Tamil

74வது குடியரசு தின விழா.. தேசிய கொடியை ஏற்றி வைத்து அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி.!

இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து முப்படை மற்றும் தமிழக காவல் உள்ளிட்ட சீருடை படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

74th Republic Day Ceremony.. Governor RN Ravi hoisted the National Flag!
Author
First Published Jan 26, 2023, 8:11 AM IST

இந்தியாவின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றிவைத்து முப்படை மற்றும் தமிழக காவல் உள்ளிட்ட சீருடை படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 

நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னையில், மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்தாண்டு வரை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காந்தி சிலை பகுதியில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தற்போது அங்கு மெட்ரோ ரயில் 2-ம் கட்டப் பணிகள் நடைபெறுவதால் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

74th Republic Day Ceremony.. Governor RN Ravi hoisted the National Flag!

இந்நிலையில், ஆளுநர் மற்றும் முதல்வருக்கு முப்படை தலைமை அதிகாரிகள், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரை தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிமுகம் செய்து வைத்தார். இதனையடுத்து, ஆளுநர் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.  இதையடுத்து, முப்படையினர், கடலோர காவல்படையினர், பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியக்குழு உள்ளிட்டோரின் அணிவகுப்பு நடைபெற்றது. மேலும், கடலோர காவல்படை, கடற்படை, விமானப் படையின் அலங்கார ஊர்திகளும் அணிவகுப்புகளும் நடைபெற்றது. 

74th Republic Day Ceremony.. Governor RN Ravi hoisted the National Flag!

இதனையடுத்து, வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது. காந்தியடிகள் காவலர் பதக்கம், திருத்திய நெல் சாகுபடிக்கான விருது ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார். இந்த குடியரசு தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, எ.வ.வேலு, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios