மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்காததையடுத்து மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த அனிதாவின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த அனிதாவின் குடும்பத்திற்கு 7 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்தது வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவருடைய குடும்பத்தைச் சார்ந்த  ஒருவருக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசுப் பணி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ள முதலமைச்சர் .மாணவ கண்மணிகள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.