7 ips officers transfers by tamilnadu government
கோவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு உடனடியாக ஆலோசனையில் ஈடுபட்ட ஆணையர் அமல்ராஜ் திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார்.
பின்னர், தமிழக ஆளுநர் பன்வாரிவால் புரோஹித் கோவையில் மாவட்ட ஆட்சியர் ஹரிகரனுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் காவல் ஆணையர் அமல் ராஜ், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கோவையில் அனைத்துத்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எடப்பாடி அரசு வேடிக்கை பார்ப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர்.
இதைதொடர்ந்து தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலர் நிரஞ்சன் மார்ட்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதில், கோவை காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கோவைக்கு புதிய போலீஸ் கமிஷனராக கே.பெரியய்யா மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி ஆணையராக இருந்த அருண் சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிவில் சப்ளை சிஐடி ஜி.வெங்கட்ராமன் சென்னை காவல் நிர்வாக ஐ.ஜி.யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை காவல் நிர்வாக ஐஜி தினகரன் எஸ்டாபிளிஸ்மெண்ட் ஐ.ஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரி டி.ஐ.ஜியாக சோனல் வி.மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அமலாக்கத்துறை எஸ்.பி.யாக அமனந்த் மான் நியமிக்கப்பட்டுள்ளார்.
