Asianet News TamilAsianet News Tamil

தொடங்கியது 6 ஆம் கட்ட வாக்குப் பதிவு !! 59 தொகுதிகளில் இன்று தேர்தல் !!

17 ஆவது இந்திய  நாடாளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, 5 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்ட நிலையில் இன்று 59 தொகுதிகளில் 6 ஆவது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

6th phase election started
Author
Delhi, First Published May 12, 2019, 8:03 AM IST

இந்தியாவில் கடந்ம ஏப்ரல் 11 ஆம்தேதி தொடங்கி மே மாதம் 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 6-வது கட்டமாக, 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 10 கோடியே 17 லட்சத்து 82 ஆயிரத்து 472 வாக்காளர்கள் ஓட்டுரிமை பெற்றுள்ளனர்.
 6th phase election started
மொத்தம் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதற்காக 1 லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று ஓட்டுப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் பாஜக சார்பில்  மேனகா காந்தி (உ.பி.- சுல்தான்பூர்) உள்பட மத்திய அமைச்சர்கள்  6 பேர் தேர்தலை சந்திக்கின்றனர்.

6th phase election started

உ.பி.யின் முன்னாள் முதலமைச்சரும்  சமாஜ்வாடி கட்சித்தலைவருமான அகிலேஷ் யாதவ் (அசம்கார்), காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திக்விஜய்சிங் (ம.பி. போபால்), ஜோதிர் ஆதித்ய சிந்தியா (ம.பி. குணா), டெல்லி முன்னாள் முதலமைச்சர்  ஷீலா தீட்சித் (டெல்லி - வடகிழக்கு டெல்லி) உள்ளிட்ட தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.

6th phase election started

இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிகிறது. தேர்தலை முன்னிட்டு அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

6th phase election started

7-வது இறுதி கட்ட தேர்தல் 19-ந் தேதி 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. அத்துடன் நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் உள்பட அனைத்து வாக்குகளும் வரும் 23-ம் தேதி எண்ணப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios