Asianet News TamilAsianet News Tamil

அமைச்சராக இருந்த 5 ஆண்டில் 60 கோடி சொத்து குவிப்பு.. மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர், மனைவி மீது FIR.

அதேபோல் கொரோனா காலத்தில் மருத்துவ உபகரடங்கள் வாங்கியதிலும் முறைகேடு நடந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் அமைச்சராக இருந்தபோது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் பெயரில் 58 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி  குவித்துள்ளார் என வழக்கு பதிவு செய்யப்பட்டது.

60 crore assets accumulated in 5 years as a minister .. Former Minister Vijayabaskar, FIR against his wife.
Author
Chennai, First Published Oct 18, 2021, 10:49 AM IST

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சுமார் 60 கோடி ரூபாய் வரை சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றஞ்சாட்டியுள்ளதுடன் அவர் மற்றும் அவரது மனைவியின் மீது எப்ஐஆர் பதிவு செய்யதுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரின் வீடு, அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர் இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இந்நிலையில் அவர் மீது இலஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

60 crore assets accumulated in 5 years as a minister .. Former Minister Vijayabaskar, FIR against his wife.

இதையும் படியுங்கள்: கண்ணில் பட்டதையெல்லாம் விற்பீர்களா.? இது பச்சை தேச துரோகம்.. மத்திய அரசை டாராக்கிய தமிழக எம்.பி.

அதேபோல புதுக்கோட்டை காவல் நிலையத்தில் விஜயபாஸ்கர் மீதும் அவரது மனைவி மீதும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி வேலுமணி, கே.சி வீரமணி, உள்ளிட்ட முன்னாள் அமைச்சர் மீது வழக்கு பதிந்துள்ள நிலையில், சி. விஜயபாஸ்கர் மீதும் வழக்கு பாய்ந்துள்ளது. சென்னை,செங்கல்பட்டு,காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை என மொத்தம் 43 இடங்களில் சிதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள FIR-ல் 2016 ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து கடந்த மார்ச் 31ம் தேதி வரை 5 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வருமானத்துக்கு அதிகமாக 27 கோடியே 22, 56, 736 ரூபாய் சொத்து சேர்த்துள்ளதாக விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

60 crore assets accumulated in 5 years as a minister .. Former Minister Vijayabaskar, FIR against his wife.

மற்றும் அவரது மனைவி ரம்யா, மகள்கள் பெயரில் விஜயபாஸ்கர் சொத்து வாங்கி  குவித்து இருப்பதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லஞ்சம் பணத்தின் மூலம் அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் பள்ளி, பொறியியல், செவிலியர் கல்லூரி என 14 கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். பதவிக்காலத்தில் டிப்பர் லாரிகள், சிமெண்ட் கலவை இயந்திரங்கள், ஜேசிபி வாங்கியதாக FIR-ல் தகவல் கூறப்பட்டுள்ளது. 7 டிப்பர் லாரிகள்,10 கலவை இயந்திரங்கள், ஒரு ஜேசிபி மதிப்பு மட்டும் 6,58,78,466 கோடி ரூபாய் என்றும், அதேபோல பல நிறுவனங்களில் பங்குதாரராக இருந்து வருவதாகவும் அதன் மூலம் 28,69,73,136  ரூபாயும்,  3,99,05,400 கோடி அளவுக்கு விவசாய நிலங்கள் வாங்கிக் குவித்ததுள்ளதாகவும், மற்றும் சென்னை தி நகர் வீடு மதிப்பு 14, 57,65,000  ரூபாய் என்றும்,  82.12  சவரன் நகைகள் மதிப்பு 40,58,975 ரூபாய் என்றும்,  பிஎம்டபிள்யூ கார் 53,33,136  ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  முதல்வருக்கு அடுத்தடுத்து போன் போட்ட பிரதமர் மோடி, அமித்ஷா.. நம்பிக்கை கொடுத்த அந்த ஒற்றை வார்த்தை.

60 crore assets accumulated in 5 years as a minister .. Former Minister Vijayabaskar, FIR against his wife.

அதேபோல் கொரோனா காலத்தில் மருத்துவ உபகரடங்கள் வாங்கியதிலும் முறைகேடு நடந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மொத்தத்தில் அமைச்சராக இருந்தபோது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் பெயரில் 58 கோடிக்கு சொத்துக்கள் வாங்கி  குவித்துள்ளார் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. வருமானவரித்துறை கணக்கின்படி 5 ஆண்டில் சி.விஜயபாஸ்கரின் வருமானம் 58.65 கோடி  என கணக்கிடப்பட்டுள்ளது, ஐந்து ஆண்டுகளில் வங்கி கடன், காப்பீடு தொகை என 34.5 கோடி செலவு செய்துள்ளார். அப்படியெனில் சி. விஜயபாஸ்கர் ரம்யாவும் ஐந்து ஆண்டுகளில் செலவு போக ரூபாய் 24 கோடி மட்டுமே சேர்ந்து இருக்க முடியும், ஆனால் வருமானத்தை மீறி 27.22 கோடி சொத்து சேர்த்துள்ளதாக விஜயபாஸ்கர், மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக எப்ஐஆர் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios