ஸ்காட்லாந்து பகுதிக்குட்பட்ட ரோத்சே நகரில் 2 வகுப்பு படித்த 6 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துக் சென்று கந்பழித்துக் கொன்ற 16 வயது கொடூர சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்

பிரிட்டன் நாட்டின் ஸ்காட்லாந்து பகுதிக்கு உட்பட்ட புட்டே தீவு நகரமான பன்னட்டைனே துறைமுகம் பகுதியில் தனது தாத்தா, பாட்டி மற்றும் தந்தையுடன் வசித்துவந்த அலேஷா மேக்பைல் என்னும் 6 வயது சிறுமி  அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த திங்கட் கிழமை பள்ளிக்குச் சென்ற அந்த சிறுமி திடீரென மாயாமானாள். அந்தக் குழந்தையின் பாட்டி, தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் பல இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக ஸ்காட்லாந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில், அருகாமையில் உள்ள உட்லண்ட்ஸ்  என்னும் இடத்தில் தனிமையான காட்டுப் பகுதியில் அலங்கோலமான நிலையில் அந்த சிறுமியின் பிரேதத்தை அப்பகுதி மக்கள் கண்டெடுத்தனர்.
இதையடுத்து சிறுமியின் உடவ் பிரோ பரிசோதளை செய்யப்பட்டது. அதில்  அலேஷா மேக்பைல் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து கொலையாளியை கைது செய்ய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த சிறுமி வாழ்ந்த வீட்டின் அருகே நின்றிருந்த ஒரு காரை தடயமாக வைத்து விசாரணையில் முன்னேறிய போலீசார்,  அலேஷா மேக்பைல் குடும்பத்தாருக்கு நன்கு பழக்கமான 16 வயது சிறுவனை நேற்று கைது செய்து க்ரினாக் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இரண்டாம் வகுப்பில் படித்துவந்த சிறுமி அலேஷாவின் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம்  அவரது உறவினர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள்  மத்தியிலும் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.