தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு 6 பேர் போட்டியின்றி எம்.பி.,களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் 23 ஆண்டுகளுக்கு பிறகு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நாடாளுமன்றம் செல்கிறார்.

திமுக சார்பாக வழக்கறிஞர் வில்சன், சண்முகமும், கூட்டணி சார்பில் வைகோவும் போட்டியிட்டனர். அதிமுக சார்பில்  முஹமது ஜான், சந்திரசேகர் மற்றும் கூட்டணி கட்சி சார்பாக பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த என்.ஆர்.இளங்கோ மனுவை வாபஸ் வாங்கினார்.

இதனை தொடர்ந்து அவர்கள் ஆறு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

 

23 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் முழங்க இருக்கிறார் மதிமுக பொதுச்செயலாளரான வைகோ. அதேபோல் மக்களவை தேர்தலில் மக்களவை தேர்தலில் தர்மபுரியில் தோல்வியுற்ற அன்புமணி ராமதாஸ், ராஜ்யசபா எம்.பியாக நாடாளுமன்றம் செல்கிறார். மக்களால் நேரடியாக தேர்வு செய்ய முடியாமல் தோல்வியை தழுவியவர்கள் ராஜ்யசபா மூலம் நாடாளுமன்றம் செல்வதை கொல்லைப்புறமாக செல்வதாக கூறுவார்கள்.