தமிழகத்தில் முதலமைச்சர் உட்பட பெரும்பாலான அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு, குட்கா ஊழல், வருமானவரித்துறை ரெய்டு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கடும் மன அழுத்தத்துக்கு ஆளாக்கியுள்ளது.

மத்திய அரசுடன் இருந்த ஒரு இணக்கமாக நட்பு சற்று சிதைந்திருப்பதாலும் எடப்பாடி அப்செட்டாகியுள்ளார். இந்தப் பிரச்சனைகளுக்கு இடையே கருணாசின் பேச்சும் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வழிகளை, எடப்பாடி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் சபாநாயகர் தனபாலை சந்தித்து இது குறித்துப் பேசினர்.

மேலும் தற்போது தினகரனுக்கு ஆதரவு கொடுக்கும் எம்எல்ஏக்கள் 3 பேரை என்ன செய்வது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தனர். இப்படி கடுமையான சிக்கலுக்கு இடையே சிக்கித் தவிக்கும் எடப்பாடிக்கு மேலும் ஒரு தலைவலியாக அமைந்துள்ளது 6 எம்எல்ஏக்கள் பிரச்சனை.

தொடக்கத்தில் இருந்தே முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் தனக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என கேட்டு  நச்சரிதது வருகிறார். மேலும் சாதி ரீதியாக சில எம்எல்ஏக்கள் தங்களுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என கேட்டு வருகின்றனர்.

இவர்களது கோரிக்கையை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த முதலமைச்சர் தற்போது தோப்பு வெங்கடாசலம் உட்பட 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டி வருகின்றனர். இது எடப்பாடிக்கு பெரும் தலைவலியை உருவாக்கியுள்ளது,