ராஜஸ்தானில் மாயாவதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 6 பேரை காங்கிரஸில் இணைத்ததற்கு தடை கோரிய வழக்கில் இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் குழப்பத்தை ஏற்படுதத்த முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் கையில் எடுத்து ஆட்சியை ஆட்டம் காண வைத்தது பாஜக. காங்கிரஸ் ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக மாயாவதி கட்சி எம்எல்ஏக்கள் 6பேரை காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏவாக மாற்றினார் அசோக்கெலாட். 
சச்சின்பைலட் தலைமையில் 18 எம்.எல்.ஏ.-க்கள் , முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். துணை முதல்வர் பதவியும் பறிபோனது சச்சின்பைலட்டுக்கு. இதற்கிடையே தனக்கு பெரும்பான்மை உள்ளதை வரும் 14-ம் தேதி நடக்க உள்ள சட்டசபையில் நிரூபிக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.-க்களை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார் அசோக் கெலொட்.


இதனை எதிர்த்தும், இணைப்புக்கு இடைக்கால தடை கோரி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார் மாயவதி. இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி மகேந்திரகுமார் கோயல், இடைக்கால தடை விதிக்க மறுத்தார். சபாநாயகர், சட்டசபை செயலருக்கு நேட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஆக.11- ம் தேதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.