Asianet News TamilAsianet News Tamil

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி பப்ளிக் எக்ஸாம் ! 10 வகுப்பு மொழிப் பாடங்களுக்கு ஒரே தேர்வு ! செங்கோட்டையன் அதிரடி !!

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வி ஆண்டில் இருந்தே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொழிப்பாடங்களுக்கு ஒரே தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

5th and 8th std public exam
Author
Chennai, First Published Sep 13, 2019, 8:01 PM IST

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பான பரிந்துரையினை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியிருந்தது. ஆனால் அதுதொடர்பான முடிவினை மாநில அரசுகள் ஆலோசித்து எடுத்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது.

இதையடுத்து மாநில அமைச்சரவையினைக் கூட்டி விவாதித்த பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் முன்பு தெரிவித்திருந்தார்.

5th and 8th std public exam

இந்நிலையில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வி ஆண்டில் இருந்தே (2019-2020) பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

5th and 8th std public exam

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் , ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு இந்தக் கல்வி ஆண்டில் இருந்தே பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, இந்த முடிவினை அடிப்படையாக வைத்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர்களது தேர்ச்சி நிறுத்தி வைக்கப்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. 

5th and 8th std public exam

மேலும் 10 வகுப்பு பொதுத் தேர்வில் மொழிப்பாடங்களுக்கு  இனி முதல் தாள், இரண்டாம் தாள் என இருப்பதை மாற்றிவிட்டு ஒரே தாளாக நடத்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios