57 flower show in kodaikannal

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசு முறை பயணமாக மூன்று நாள் பயணத்திலிருக்கிறார்.இதில் ஊட்டி மலர்கண்காட்சியை தொடங்கிவைத்தவர், இன்று கொடைக்கானலில் 57வது மலர்க்கண்காட்சி தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரையாற்றினார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆண்டுதோறும் பிரையண்ட் பூங்காவில் நடக்கும் மலர்கண்காட்சி இந்த முறை வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கும்வண்ணம் அமைந்துள்ளது என்றும் 25000 வகையான மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

சிறுமலைப்பகுதியை ஆய்வு செய்து, சுற்றலாபயணிகளை ஈர்க்கும் வண்ணம் மேம்படுத்தப்படும். கொடைக்கானல் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் ரோஜாதோட்டம், கொய்மலர் மையம் அமைக்கப்பட்டுள்ளதென தெரிவித்தார். வத்தலகுண்டு – கொடைக்கானல் இடையே மாற்றுப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்