ஒவ்வொரு தமிழக குடிமகன் தலையிலும் 57 ஆயிரம் ரூபாய் கடனை சுமத்தியுள்ளனர் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சட்டப்பேரவையில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், நடப்பு நிதியாண்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத இறக்கம் தமிழ்நாட்டின் நிதி சூழ்நிலையை சிக்கலான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது என நிதியமைச்சர் ஓபிஎஸ்சே நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.  மத்திய அரிசிடம் இருந்த வரி பங்கு தொகை ரூ.7,500 கோடிக்கு மேல் வர வேண்டி உள்ளது. தேர்தல் வரப்போகிறது என்பதற்காக பீதியில் வெளியிட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.57 ஆயிரம் கடன் வைத்துள்ளனர்.

இதையும் படிங்க;- ஹாலிவுட் படம் ரேன்ஜில் கிணற்றுக்குள் தலைக்குப்புற கவிழ்ந்த கார்.... 3 பேர் உடல் நசுங்கி உயிரிழப்பு..!

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி பட்ஜெட்டில் 
எதுவும் இடம்பெறவில்லை. அம்மா உணவகத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கி உள்ளனர். அம்மா உணவகம் ஜெயலலிதா இருந்த போது எப்படி இருந்தது. இப்போது எந்த நிலையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

இதையும் படிங்க;- தடதடக்கும் தமிழக பட்ஜெட்.... படபடக்கும் திமுக... அடித்து தூக்கும் அதிமுக..!

தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை என்று பட்ஜெட்டில் குறிப்பிட்டு மத்திய அரசு மீது பழி போடுகிறார்கள். எத்தனையோ முறை அமைச்சர்கள் டெல்லி சென்று வருகிறார்கள். நிதியை கேட்டு வாங்க வேண்டியதுதானே? எனவே திறமையற்ற நிர்வாகத்திற்கு இது எடுத்துக்காட்டாக உள்ளது.இந்த பட்ஜெட் காற்றில் வரைந்த ஓவியம் போல் உள்ளது என கருத்து தெரிவித்துள்ளார்.