500 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடல்.. வரவேற்ற கையோடு தமிழக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த அன்புமணி.!

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5329  மதுக்கடைகளில் 500 கடைகள் இன்று முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்க நடவடிக்கை.

500 Tasmac shops to be closed from today: Welcome by Anbumani Ramadoss

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5,329  மதுக்கடைகளில் 500 கடைகள் இன்று முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிறுவனம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என  அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 5329  மதுக்கடைகளில் 500 கடைகள் இன்று முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இது தாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்க நடவடிக்கை ஆகும். தமிழ்நாட்டில் படிப்படியாக முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதை நோக்கிய பயணத்தின் தொடக்கமாக இது அமைய வேண்டும்.

இதையும் படிங்க;- நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழ்நாட்டின் சாபக்கேடு! விஜய் ரசிகர்களை தெறிக்கவிடும் திருமாவளவன்!

500 Tasmac shops to be closed from today: Welcome by Anbumani Ramadoss

தமிழ்நாட்டில் 500  மதுக்கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இரு மாதங்களுக்கு மேலாகியும் அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படாமல் இருந்து வந்தது. சட்டப்பேரவையில் அறிவித்தவாறு மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தேன். அதன் பயனாக இன்று முதல் 500 மதுக்கடைகள் மூடப்படவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இதையும் படிங்க;-  BREAKING: குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது..!

500 Tasmac shops to be closed from today: Welcome by Anbumani Ramadoss

மூடப்படும் மதுக்கடைகள் தவிர மீதமுள்ள 4829 மதுக்கடைகளும் படிப்படியாக மூடப்பட்டு தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். காலாண்டுக்கு 500 மதுக்கடைகள் மூடப்பட்டால், அடுத்த இரண்டரை ஆண்டுகளில் முழுமையான மதுவிலக்கு சாத்தியமாகி விடும். அதற்கேற்றவாறு  உடனடியாக கால அட்டவணையை தயாரித்து வெளியிடுவதுடன், அதனடிப்படையில் மதுக்கடைகளை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios