Asianet News TamilAsianet News Tamil

500 கோடி சம்பாதிச்ச தி.மு.க. எம்.எல்.ஏ!: மாட்டிவிட்ட மாஜி பங்காளி

*    எட்டாம் வகுப்பு முடியும் வரை எந்த வாரியத் தேர்விலும் ஒரு மாணவன் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது ஐந்தாம், எட்டாம் வகுப்பு தேர்வை ‘பொதுத் தேர்வு’ என்று ஏன் குறிப்பிட வேண்டும். 
 

500 core earn dmk mla?
Author
Chennai, First Published Feb 1, 2020, 7:12 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

*    எட்டாம் வகுப்பு முடியும் வரை எந்த வாரியத் தேர்விலும் ஒரு மாணவன் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது ஐந்தாம், எட்டாம் வகுப்பு தேர்வை ‘பொதுத் தேர்வு’ என்று ஏன் குறிப்பிட வேண்டும். 

-    பிரின்ஸ் கஜேந்திர பாபு (கல்வி ஆலோசகர்)

*    பொதுவாக ரஜினி  தன் வீட்டிலிருந்து இதமான ஏஸி வீசும் காரில்தான் வெளியே செல்வார். ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கான ஸீன் எடுக்கப்பட்டாதும் கேரவேனுக்குள் போய் அமர்ந்து கொள்வார். ஷூட்டிங் முடிந்ததும் வீட்டுக்கோ அல்லது தன் அறைக்கோ திரும்பிவிடுவார். இதுவே அவரது ரெகுலர் நடவடிக்கை. ஆனால் முதல் முறையாக காட்டுக்குள் சென்றதால் அவருக்கு சில அசெளகரியங்கள் உண்டாகின. 
-    பத்திரிக்கை செய்தி

*    கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு சற்று முன் தலைவர் ஸ்டாலின் என்னை அழைத்து ‘கதிருக்கு இருக்கும் திறமைக்கு டெல்லிக்குதான் போக வேண்டும். கடந்த முறையே தவறிவிட்டது. இந்த முறை கதிர்தான் நிற்க வேண்டும்.’ என தெரிவித்தார். உடனே நான் ‘உங்கள் இஷ்டம்’ என்றேன். இருப்பினும் எந்த வேட்பாளரையும் உறுதி செய்யும் உரிமை, அதிகாரம் நம் தலைவரிடம் மட்டுமே உள்ளது. 
-    துரைமுருகன் (தி.மு.க. பொருளாளர்)

*    ஈரோடு பெரிய மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம் கிறித்தவர்கள்  கண்ட்ரோலில்தான் உள்ளது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது போல சென்னை லயோலா கல்லூரியும் இந்துகோயில் நிலத்தில்தான் அமைந்திருக்கிறது. இதை சும்மா சொல்லவில்லை. அக்கல்லூரியின் சர்வே நம்பரை எடுத்து, அதன் வரலாற்றை அலசினாலே பல உண்மைகள், மர்மங்கள் புரியும். 
-    உமா அனந்தன் (சமூக ஆர்வலர்)

*    தி.மு.க.வுல மதுரைக்கு தெற்கே அழகிரிக்கு பட்டா போட்டு கொடுத்திருந்தாங்க. என்ன பாவம் பண்ணினேனோ, அந்தக் கட்சியில் நான் மாவட்ட செயலாளராக இருந்தேன். கலைஞர் கூப்பிட்டாருன்னுதான் அங்கே போனேன். அவருக்கு அப்புறம் தி.மு.க. கார்ப்பரேட் கம்பெனியாகிடுச்சு.
-    கருப்பசாமி பாண்டியன் (மாஜி தி.மு.க. எம்.எல்.ஏ., தற்போது அ.தி.மு.க. புள்ளி)


*    தஞ்சை பெரிய கோயிலில் குடமுழக்கு நிகழ்வுக்கான ஏற்பாட்டின் ஒரு பகுதியாக அணு விஞ்ஞானிகளும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்கு என்ன காரணம் என்று கோயிலின் உதவி ஆணையர் கிருஷ்ணன் விளக்கம் கொடுக்கையில் ‘1997 ஆம் ஆண்டிலும் கோபுர கலசங்களுக்கு தங்கமுலாம் பூசப்பட்டுள்ளது. இதில் இருக்கும் அளவுகளை சரிபார்க்க மட்டுமே விஞ்ஞானிகள் வந்து சென்றிருக்கிறார்கள்.’ என்று சொல்லியிருக்கிறார். 
-    பத்திரிக்கை செய்தி

*    தமிழகத்தின் இன்றைய நிலைமை கேவலமாக உள்ளது. கர்நாடகாவிலிருந்து வந்த ஒருவர் ஈ.வெ.ராவை விமர்சித்து பேசும் அளவிற்கு துணிச்சல் வந்துள்ளது. தமிழகத்தில் திராவிட பாரம்பரியத்தைக் காக்க வேண்டும். அதை காக்கும் தலைவர் ஸ்டாலின் தான். அவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருவார். 
-    திவாகரன் (சசிகலாவின் தம்பி)

*    டில்லியில் கெஜ்ரிவால், மேற்கு வங்கத்தில் மம்தாவால் ஆட்சியை பிடிக்க முடிகிறபோது, தமிழகத்தில் நம்மாலும் ஆட்சியை கொண்டு வர முடியும். அதற்கு கடுமையாக் உழைக்க வேண்டும். மேடையில் இருக்கும் தலைவர்கள் தங்களுடன் நூறு தொண்டர்களை எங்கு அழைத்து வரும் திறனுடன் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் கட்சி பலம் பெறும். 
-    கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)

*     தி.மு.க.வை குடும்ப கட்சி, குடும்ப ஆட்சின்னு இப்ப சொல்றார் கருப்பசாமி பாண்டியன். அஞ்சு வருஷம் தி.மு.க. ஆட்சியில எம்.எல்.ஏ.வாக இருந்து ஐநூறு கோடி சம்பாதிச்சீங்களே, அப்பவே சொல்லியிருக்க வேண்டிதானே? சாதாரண அம்பாசிடர் காரில் போன உங்களை அறுபது லட்சம் ரூபாய் காரில் உலா வர வைத்தது தி.மு.க.தானே

-     மாலை ராஜா (மாஜி தி.மு.க. எம்.எல்.ஏ.)

Follow Us:
Download App:
  • android
  • ios