தமிழகத்தில் வன்முறையை தூண்டும் வகையில் வாசகங்களை ஏந்திய பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஐந்துக்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.   பாஜகவினர் கொண்டு வந்த பதாகைகளில் தமிழகத்தை மிரட்டும் வகையில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   அதாவது தேசிய முற்போக்கு தமிழர் கழகம் ,  தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சேர்ந்த சார்லஸ் ,  வெற்றிவேந்தன் ,  லயோலா மணி , ஆகியோர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர். 

 

இதில் கூறியிருப்பதாவது :- பிப்ரவரி 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக  பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடைபெற்ற பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தின்போது அடையாளம் தெரியாத சிலர் டெல்லி  தீப்பற்றி எரிந்தது அடுத்து   சென்னை தீப்பற்றி எரிய வேண்டுமா என அமைதியாக உள்ள தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் மிரட்டல் தெரிவிக்கும் வகையிலும் விளம்பர  பலகையை கையில் ஏந்தி வந்தனர்,  இவர்கள் யார் சமூகத்தில் பதட்டத்தை உருவாக்க நினைக்கும் இந்த சமூக விரோதிகள் தமிழகத்தில் வன்முறை நடத்த திட்டம் உருவாக்கி இருப்பார்களோஎன்ற சந்தேகம் எழுகிறது. 

ஆகவே தமிழ்நாட்டில் பதட்டத்தை உருவாக்கியுள்ள இந்த சமூக விரோதிகளின் புகைப்படம் மற்றும் விளம்பர பலகையில் எழுதிய வாசகங்கள் வசனத்தையும் இந்தக் கடிதத்துடன் இணைத்துள்ளோம் .  பொதுவெளியில் காவல்துறையினர் முன்பே அவர்கள் விடுத்துள்ள மறைமுக மிரட்டல்கள் சமூக வலைதளங்களில் தீ போல பரவி சலசலப்பை ஏற்படுத்திநிருப்பது மட்டும்  அல்லாமல் மக்கள் மத்தியில் மோதலை ஏற்படுத்த நினைக்கும் இவர்களை காவல் துறையை அதிகாரிகள் உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம் இவ்வாறு அந்த புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது .