ஐந்து மாநிலத் தேர்தல்களில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகுத்து வருவதால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து வருகின்றனர். இன்னொரு பக்கம்  ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உட்பட பா.ஜ.வின் முக்கிய தலைகள் மண்ணைக் கவ்விக்கொண்டிருக்கின்றனர்.

ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 28ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது.

சட்டிஸ்கரில் காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் பாஜக முன்னிலை வகித்தது. பின்னர், திடீர் திருப்பமாக, பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது. காங்கிரஸ் முன்னிலையில் சென்று வருகிறது.

ட்டிஸ்கர் சட்டமன்றத் தேர்தல், இரண்டு கட்டமாக நடந்து முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. தெற்கு சட்டீஸ்கரில் 18 இடங்களுக்கு முதல் கட்ட தேர்தல் நவம்பர் 12 அன்று நடந்தது. இரண்டாவது கட்ட தேர்தல் நவம்பர் 20-ம் தேதி நடந்தது. இதில், 76.35 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

சட்டீஸ்கரின் 90 இடங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் பூபேஷ் பாகெல் தலைமையில் காங்கிரஸ் கட்சியும், ரமன் சிங் தலைமையில் பாஜகவும் போட்டியிட்டுள்ளன. ராஜ்நந்த்கான் தொகுதியில் ரமன் சிங் பின்னடைவை சந்தித்துள்ளார்.

3 முறையாக தொடர்ந்து ஆட்சியமைத்த ரமன் சிங் இந்த முறையும் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தெரிவித்திருந்தன. இந்தநிலையில் போட்டாப்போட்டியாக இருந்து வருகிறது


ஆட்சியமைக்க 46 சீட்டுகள் தேவை எனும் நிலையில் காங்கிரஸ் கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் 39 இடங்களை வென்றிருந்தது. ரமன் சிங் 49 இடங்களை வென்று ஆட்சி பிடித்திருந்தார்.

தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலில், ஆட்சி தக்கவைக்கப்படுமா? அல்லது தட்டிபறிக்கப்படுமா? என்பது பிற்பகலுக்குள் தெரிந்து விடும். காங்கிரஸ் முன்னிலை வகித்து வருவதால், தொண்டர்கள் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.