Asianet News TamilAsianet News Tamil

எம்.பி. ஞானதிரவியத்தை திமுக தலைமையை தொடர்ந்து ரவுண்ட் கட்டும் போலீஸ்.. கைது செய்ய திட்டமா?

தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டலத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும், தூய யோவான் மேல்நிலைப் பள்ளியின் தாளாளராகவும் திமுக எம்.பி. ஞானதிரவியம் இருந்து வந்தார். 

5 case filed against DMK MP Gnanathiraviam
Author
First Published Jun 27, 2023, 11:54 AM IST

நெல்லையில் மதபோதகர் தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுக எம்.பி. ஞானதிரவியம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டலத்தின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராகவும், தூய யோவான் மேல்நிலைப் பள்ளியின் தாளாளராகவும் திமுக எம்.பி. ஞானதிரவியம் இருந்து வந்தார். இந்நிலையில், பிஷப் பர்னபாஸ் ஏற்பட்ட மோதலை அடுத்து கடந்த சில நாட்களுக்கு அப்பொறுப்பில் இருந்து எம்.பி ஞானதிரவியம் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அரசு வழக்கறிஞர் அருள்மாணிக்கம் என்பவர் நியமிக்கப்பட்டார். இதனால், திமுக எம்.பி.யின் ஆதரவாளர் அவர் மீது கடும் கோபத்தில் இருந்து வந்தனர். 

இதையும் படிங்க;- 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை என்றால் நடவடிக்கை! நெல்லை திமுக எம்.பி.ஞானத்திரவியத்திற்கு கட்சி தலைமை.!

5 case filed against DMK MP Gnanathiraviam

இந்நிலையில் நேற்று காலை சிஎஸ்ஐ மதபோதகர் அலுவலகத்தில் நுழைந்த திமுக எம்.பி ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் மதபோதகர் காட்வே நோபல் என்பவரை கடுமையாக தாக்கி தகாத வார்த்தையால் திட்டி ஓட ஓட விரட்டி அடித்தனர். இது தொடர்பான வீடியோவாக வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க;- திமுக அமைச்சரின் மருமகனை தட்டித்தூக்கிய இபிஎஸ்... அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்..!

5 case filed against DMK MP Gnanathiraviam

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பாதிரியார் நெல்லை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரனிடம் புகார் அளித்தார். மேலும், பிஷப் பர்னபாஸ் திமுக தலைமையிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திமுக எம்.பி ஞானதிரவியம், சிஎஸ்ஐ பொறுப்பாளர் ஜெயசிங், உள்பட 33 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக திமுக தலைமை 7 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு திமுக எம்.பி ஞானதிரவியத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க;- ராஜ்பவனை சுத்தமாக வைப்பது தான் ஆளுநரின் வேலை.. அதை மட்டும் பாருங்கள்.. இறங்கி அடிக்கும் தயாநிதி மாறன்.!

Follow Us:
Download App:
  • android
  • ios