Asianet News TamilAsianet News Tamil

பவர் ஸ்டாருடன் வனிதாவுக்கு 4வது திருமணமா.?? மனம் திறந்த வனிதா.. தன் தனிப்பட்ட விருப்பம் என பதிலடி.

நானும் பவர் ஸ்டார் சீனிவாசனும், மணமகன் மணமகள் வேடத்தில் பிக்கப் என்ற திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்தான் அது. அதைத்தான் நான் வெளியிட்டேன். ஆனால் இது எனது அடுத்த திருமணம் என பலரும் விமர்சித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 

4th marriage for Vanitha with Power Store? Vanitha with an open mind .. vanitha says my personal preference.
Author
Chennai, First Published Jul 24, 2021, 10:01 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தான் நாலு திருமணம் அல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன் அது எனது தனிப்பட்ட உரிமை அதில் யாரும் தலையிட முடியாது என நடிகை வனிதா விஜயகுமார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் காட்டமாக தெரிவித்துள்ளார். பவர்ஸ்டார் சீனிவாசன்- வனிதா இருவரும் மாலை மாற்றிக் கொண்டு திருமணம் ஆனவர்களைப்போல வெளியான புகைப்படத்தை அடுத்து பலரும் வனிதாவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் அவர் அதற்கு பதிலளிக்கும் வகையில் இவ்வாறு கூறியுள்ளார். 

4th marriage for Vanitha with Power Store? Vanitha with an open mind .. vanitha says my personal preference.

பிரபல நடிகர் விஜயகுமார்-மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள் வனிதா, இவரும் குழந்தைப் பருவத்திலிருந்து தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமானவர். விஜய் தொலைக்காட்சியில் பிரபலங்கள் கலந்து கொண்ட பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சக போட்டியாளர்களுக்கு கடுமையான டப் கொடுத்து மீண்டும் பிரபலமானவர் வனிதா, அதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய சமையல் திறமையை வெளிப்படுத்தி டைட்டில் வின்னராகவும் மாறினார். சினிமா வாழ்க்கையில் பெரிய அளவில் கோலாச்சாமல் போனாலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார் வனிதா. ஆனால் திரையில் வெற்றி பெற்ற அளவிற்கு அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் வெற்றி பெற்றாரா என்பது கேள்வி குறிதான்.

4th marriage for Vanitha with Power Store? Vanitha with an open mind .. vanitha says my personal preference.

அவரின் திருமண வாழ்க்கை சோதனை நிறைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் ஒருகட்டத்தில் நன்றாக சென்று கொண்டு இருந்த அவரின் வாழ்க்கையில் மூன்றாவது காதல் பூகம்பமாக மாறியது, பல பிரச்சனைகளை கடந்து பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து ஒரு சில மாதங்களில் அவரை விட்டு விலகினார் வனிதா. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மூலம் டாப் இடத்திற்கு சென்ற வனிதாவுக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. இந்நிலையில் வனிதா தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது, அதாவது பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக கல்யாண கோலத்தில் அவர் நிற்பதுதான் அது. அதே நேரத்தில் அவரது ஜாதகத்தில் நான்காவது திருமணத்துக்கு வாய்ப்பிருப்பதாகவும் ஜோதிடர் கூறியதாக அவரே யூடியூப் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். இது இரண்டையும் வைத்து பார்க்கும்போது அவர் நான்காவது திருமணத்துக்கு தயாராகிவிட்டார் என பலரும் அவரை விமர்சித்து வந்தனர். ஆனால் அவர் வெளியிட்ட படம், பவர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கும் படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் என்பது பின்னர் தெரிந்தது. 

4th marriage for Vanitha with Power Store? Vanitha with an open mind .. vanitha says my personal preference.

இதற்கிடையில் அந்த புகைப்படம் குறித்து எழுந்த சர்ச்சையை தொடர்பாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் அரங்கில் வனிதா செய்தியாளர்களுக்கு விளக்கினார். அப்போது அவர் பேசியதாவது:  நானும் பவர் ஸ்டார் சீனிவாசனும், மணமகன் மணமகள் வேடத்தில் பிக்கப் என்ற திரைப்படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்தான் அது. அதைத்தான் நான் வெளியிட்டேன். ஆனால் இது எனது அடுத்த திருமணம் என பலரும் விமர்சித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். நயன்தாரா சூப்பர் ஸ்டாராக உயர்ந்து இருக்கிறார் என்றால் கஷ்டப்பட்டு தான் அவர் இந்த இடத்திற்கு வந்துள்ளார். அது குறித்து நான் பெருமைப்படுகிறேன். பெண்களுக்கு சுதந்திரம் நிச்சயம் வேண்டும், அதற்கு ஊடகங்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். என் சொந்த வாழ்க்கையில் நான் நான்கு திருமணம் அல்ல, 40 திருமணம் கூட செய்து கொள்வேன். அது எனது சொந்த விருப்பம் என காரசாரமாக பதிலடி கொடுத்தார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios