ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்துவரும் நிலையில் ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில்  பள்ளி வளாகத்தில் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்ணை மூன்று பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்த அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அந்த வல்லுறவில் ஈடுபட்ட அந்த 3 இளைஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது இதில் இந்தியாவில் வேகம் எடுத்துள்ள இந்த வைரஸ்  கடந்த சில  நாட்களாக பன் மடங்காக உயர்ந்துள்ளது . இதுவரை இந்தியாவில் 24 ஆயிரத்து 942 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . இதுவரையில் சுமார் 780 பேர் உயிரிழந்துள்ளனர் .  

5 ஆயிரத்து 498 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் . விரைவில் வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுதும் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது .  ராஜஸ்தான் மாநிலம் அரசுப் பள்ளி வளாகத்தில் வைத்து நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்ணை மூன்று வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்நிலையில்  தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார், அதில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர்  வேலை நிமித்தமாக, தான் ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் வந்ததாகவும் அதற்கிடையில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால்,  கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இங்கேயே சிக்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில்  உணவு உடை தங்குமிடம் என அத்தியாவசிய தேவைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டதால் ,  தனது சொந்த ஊரான ஜெய்ப்பூருக்கு நடந்தே  சொல்ல முடிவுசெய்து  தான்  சாலை மார்க்கமாக நடந்து சென்றபோது ,

 

வியாழக்கிழமை இரவு படோட்  காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது போது,  அங்கு வந்த 3 வாலிபர்கள் தன்னை பலவந்தப்படுத்தி தன்னுடன் உடலுறவு கொண்டதாகவும், தான் கத்தி கூச்சல் போட்டும் தன்னை காப்பாற்ற யாருப் வெளியில் வரவில்லை என்றும் அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார் .  அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார்  ரிஷிகேஷ் மீனா, லகான் ரீகர் மற்றும் கமல் கர்வால் என்பவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும்  பின்னர் அவர்கள் மீது பாலியல் மற்றும் பலாத்கார பிரிவுகள் கீழ் வழக்கு பதிவு செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த தாகவும்  டிஎஸ்பி பார்த்த் சர்மா தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த பெண்ணுக்கு மருத்துவ பிரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.