Asianet News TamilAsianet News Tamil

பாடத்திட்டங்கள் 40 சதவீதம் குறைப்பு... அதிரடி தகவலை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன்..!

நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் 90% கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எத்தனை போட்டித் தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்குவோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

40 percent reduction in syllabus...minister sengottaiyan information
Author
Tamil Nadu, First Published Sep 18, 2020, 12:40 PM IST

நீட் தேர்வில் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் 90% கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. எத்தனை போட்டித் தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்குவோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன்;- குழு தந்த அறிக்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள் 40% குறைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வில் 90% கேள்விகள் மாநில பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்பட்டுள்ளன. எத்தனை போட்டித்தேர்வு வந்தாலும் அதை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் உருவாக்குவோம். சனிக்கிழமைகளில் கல்வித்தொலைக்காட்சியில் 6 மணி நேரம் மாணவர்களின் சந்தேகங்கள் தீர்க்கப்படும்.

40 percent reduction in syllabus...minister sengottaiyan information

மேலும், கொரோனா வைரஸ் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும். காலாண்டு தேர்வு குறித்து தற்போது முடிவு செய்ய முடியாது. கொரோனா நோய் தொற்று குறைந்த பின்னரே தேர்வுகள் குறித்து ஆலோசிக்கப்படும். கொரோனா காலத்திற்கு பிறகு விளையாட்டுத்துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும். சிறப்பாசிரியர்களாக சேர்ந்த தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios