தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இந்நிலையில், #மே7அழிவின்ஆரம்பம் என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்விட்டர் பக்கத்தில் முதலிடத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

தமிழகத்தில் வருகிற 7-ந்தேதி முதல் சில நிபந்தனைகளுடன் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் திறந்து இருக்கும் என்றும், ‘பார்’கள் இயங்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தலைநகர் சென்னையில் டாஸ்மாக் திறக்கப்படும் அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது தமிழக அரசு. 

இந்நிலையில், #மே7அழிவின்ஆரம்பம் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதில், ‘’40 நாட்களாக நீங்கள் கொண்டு வந்த திட்டங்கள், நீங்கள் செய்த நன்மைகள் அனைத்தும் வீண்’’ என கீழ்கண்டவாறு பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.