திமுக தலைவர் மு.க. மீது, பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மு.க. மீது, பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 4ம் தேதி பொள்ளாச்சியில் பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின், அவதூறாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைசாமி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் வேலுமணி, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் மீது ஆதாரமில்லாமல் அவதூறு பரப்பியதாக கூறப்பட்டது.
பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதிகாரிகளை மிரட்டுகிற தொனியில், மு.க.ஸ்டாலினின் பேச்சு அமைந்திருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தம்மை தரக்குறைவாக விமர்சித்து வருவதாகவும், நாங்கள் பேசினால் காது சவ்வு கிழிந்து விடும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கெனவே தெரிவித்து இருந்தார்.
