மே 19ம் தேதி நடைபெற உள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டுள்ள அறிக்கையில், சூலூர் தொகுதியில் கோவை புறநகர் முரட்சித் தலைவி அம்மா பேரவை தலைவர் வி.பி.கந்தசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். 
அரவக்குறிச்சியில் கரூர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் வி.வி.செந்தில் நாதன் களமிறங்க உள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு அவனியாபுரம் பகுதிச் செயலாளர் எஸ்.முனியாண்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஒட்டப்பிடாரம் தொகுதியில் தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழக துணை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான பே.மோகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், சமீபத்தில் திமுகவில் இணைந்த கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி களமிறக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு எதிராக செந்தில் நாதன் களமிறக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியை தோற்கடித்து செந்தில் நாதன் வெற்றிபெறுவாரா? என்கிற எதிர்பார்த்து ஏற்பட்டுள்ளது.