Asianet News TamilAsianet News Tamil

திமுக தலைவராகி 3ம் ஆண்டு தொடக்கம்..! கலைஞர் சமாதியில் சபதமெடுத்த முக.ஸ்டாலின்..!

திமுக தலைவராக 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மு.க.ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சு.திருநாவுக்கரசர் எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிகுமார், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

3rd year as DMK leader begins ..! Stalin sworn in at artist's tomb ..!
Author
Tamil Nadu, First Published Aug 29, 2020, 9:05 AM IST

திமுக தலைவராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்று 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மு.க.ஸ்டாலின், கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அவருக்கு கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.அங்கே வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்கும்.அடுத்த முறை முதல்வராகத்தான் வருவேன் என்று சபதமெடுத்திருக்கிறார் ஸ்டாலின்.

3rd year as DMK leader begins ..! Stalin sworn in at artist's tomb ..!

திமுக தலைவராக 50 ஆண்டுகள் இருந்த கருணாநிதி, கடந்த 2018 ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து 2018ஆகஸ்ட் 28-ம் தேதி நடந்த திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவராக ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பொருளாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார்.

ஸ்டாலின் தலைவரான பிறகு 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி புதுச்சேரி உட்பட மொத்தமுள்ள 40தொகுதிகளில் 39-ல் வென்றது. 2021-ல் நடக்கவுள்ள சட்டப் பேரவைத் தேர்தல் ஸ்டாலினுக்குமிகப்பெரிய சவாலாக உள்ளது.இந்நிலையில், திமுக தலைவர் பதவியில் நேற்றுடன் 2 ஆண்டுகளை நிறைவு செய்து 3-வது ஆண்டில் ஸ்டாலின் அடியெடுத்து வைத்துள்ளார். இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின்  மரியாதை செலுத்தினார். 
திமுக தலைவராக 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மு.க.ஸ்டாலினுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சு.திருநாவுக்கரசர் எம்.பி., விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ரவிகுமார், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios