3 தொகுதி தான்...! தேமுதிகவை கதற விடும் ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ்!
4 தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா எம்பி சீட் என்று சென்று கொண்டிருந்த அதிமுக – தேமுதிக பேச்சுவார்த்தை தற்போது பின்னோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது.
4 தொகுதிகளுடன் ஒரு ராஜ்யசபா எம்பி சீட் என்று சென்று கொண்டிருந்த அதிமுக – தேமுதிக பேச்சுவார்த்தை தற்போது பின்னோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது.
7 தொகுதி தங்களுக்கும் வேண்டும் என்பது தான் தேமுதிகவின் இழுபறிக்கு காரணம். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை, 4 தொகுதிகளை தருகிறோம் என்று அதிமுக தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அதனுடன் சேர்த்து ஒரு ராஜ்யசபா மற்றும் எட்டு இடைத்தேர்தல் தொகுதிகள் என்று தேமுதிக பேரம் பேச ஆரம்பித்தது.
ஆனால் அவ்வளவு கொடுக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மூலமாக சுதீசுக்கு புரிய வைத்துக் கொண்டிருந்தது அதிமுக தரப்பு. அப்போது தான் விஜயகாந்தின் தூதுவர்களாக தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் துரைமுருகன் வீடு தேடிச் சென்று அவமானப்பட்டு திரும்பினர். இதன் பிறகு அன்று இரவு மீண்டும் அதிமுக அமைச்சர்களை சந்தித்து பேசிய போது சுதீசிடம் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுதீசிடம் அமைச்சர்கள் பெரிய அளவில் பேசவில்லை. பியூஸ் கோயல் மட்டுமே பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
கடந்த முறை 14 தொகுதிகளில் நாங்கள் போட்டியிட்டோம். தற்போது அதில் பாதி கூட இல்லை என்றால் எப்படி என்று பழைய பல்லவியை சுதீஷ் பாடியதால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை அடுத்து மறுநாள் அதிமுக தரப்பிடம் இருந்து அழைப்பை எதிர்பார்த்து சுதீஷ் காத்திருந்துள்ளார். ஆனால் எந்த அழைப்பும் வரவில்லை. இதனை அடுத்து சுதீஷ் தொடர்பு கொண்ட போது அங்கிருந்து பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் இல்லை.
இதனிடையே அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி எடப்பாடியை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது தங்களுடன் பேசிக் கொண்டே தேமுதிக தரப்பு திமுகவிடம் சென்றது குறித்து எடப்பாடி அதிருப்தியை தெரிவித்துள்ளார். மேலும் அவர்களை இனி நம்ப வேண்டாம், மூன்று தொகுதிகள் தான் தர முடியும் என்று கூறிவிட்டு அடுத்த வேலையை பார்க்கலாம் என்று எடப்படி கூறியுள்ளார்.
இதனையே ஓ.பி.எஸ்சும் வழிமொழிந்துள்ளார். உடனடியாக இந்த மூன்று தொகுதி மேட்டர் தேமுதிக தரப்புக்கு பாஸ் செய்யப்பட்டுள்ளது. இதனால் பதறிப் போன சுதீஷ் மீண்டும் பியூஸ் கோயலை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் பியூஸ் கோயலை சுதீசால் போனில் கூட பிடிக்க முடியவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சுதீஷ் தரப்பு திணற ஆரம்பித்துள்ளது.